Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மன்னார் மனித புதைகுழி தொடர்பான இறுதி தீர்மானம், இன்று

March 22, 2019
in News, Politics, World
0

மன்னார் மனித புதைகுழி தொடர்பான இறுதி தீர்மானம், இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி மன்னார் நீதவானை, தடயவியல் பரிசோதனைக் குழு ஒன்றும், காணாமல் போனோர் அலுவலகத்தின் பிரதிநிதிகளும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அகழ்வு பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட கார்பன் பரிசோதனையின்படி, அவை 1400ஆம் ஆண்டு முதல் 1650ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மரணித்தவர்களுடையது என கூறப்பட்டிருந்தது.

எனினும் இதனை ஏற்றுக்கொள்ள காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் மறுப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே இன்று இந்த விடயம் தொடர்பான இறுதி தீர்மானமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

எனினும், குறித்த கார்பன் அறிக்கையானது மன்னார் மனித புதைகுழி விடயத்தில் இறுதி முடிவை மேற்கொள்வதற்கான ஆவணமாக அமையாது என்றும் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

Previous Post

ஐ.நா.வில் இன்று முன்வைக்கப்படவுள்ள இன்னொரு பிரேரணை

Next Post

மக்கள் விடுதலை முன்னணிக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்

Next Post

மக்கள் விடுதலை முன்னணிக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures