Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மத்திய ஆசிய சவால் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை மகளிர் அணி

December 27, 2021
in News, Sri Lanka News
0
மத்திய ஆசிய சவால் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை மகளிர் அணி

பங்களாதேஷ், மிர்பூர் உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் மத்திய ஆசிய சவால் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டியில் மகளிர் பிரிவில் இலங்கை அணி 3 ஆம், 4ஆம் இடங்களைத் தீர்மானிக்கும் நிரல்படுத்தல் போட்டியில் விளையாடவுள்ளது.

இந்த சுற்றுப் போட்டியின் ஆரம்பப் போட்டியில் முற்றிலும் எதிர்பாராதவிதமாக நேபாளத்திடம் 2 – 3 என்ற செட்கள் அடிப்படையில் தோல்வி அடைந்த இலங்கை, அடுத்த 3 போட்டிகளில் கிர்கிஸ்தான், மாலைதீவுகள், பங்களாதேஷ் ஆகியவற்றை தலா 3 நேர் செட்களில் வெற்றிகொண்டிருந்தது.

எனினும் இன்று முற்பகல் நடைபெற்ற கடைசிப் போட்டியில் உஸ்பெகிஸ்தானிடம் 2 – 3 என்ற செட்கள் அடிப்படையில் தோல்வி அடைந்ததால் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இலங்கை இழந்தது.

உஸ்பெகிஸ்தானுடனான இன்றைய போட்டியில் முதலாவது செட்டில் கடும் சவாலை எதிர்கொண்ட இலங்கை, சமநிலை முறிப்பு முறையில் 26 – 24 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

2ஆவது செட்டில் திறமையை வெளிப்படுத்திய இலங்கை 25 – 18 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று 2 – 0 என்ற செட்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

ஆனால், அடுத்த 3 செட்களிலும் ஏகப்பட்ட தவறுகளை இழைத்ததால் இலங்கை தொல்வியைத் தழுவியது.

3ஆவது செட்டில் கடும் சவால் விடுத்து விளையாடிய இலங்கைக்கு வெற்றிபெறக்கூடிய வாய்ப்பு இருந்தபோதிலும் தவறுகள் இழைத்ததால் 20 – 25 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்தது.

தொடர்ந்து 4ஆவது செட்டில் நுட்பத்திறனுடன் விளையாடிய உஸ்பெகிஸ்தான் 25 – 19 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று செட்கள் நிலையை 2 – 2 என சமப்படுத்தியது.

தீர்மானமிக்க கடைசி செட்டில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்டபோதிலும் கடைசிக் கட்டத்தில் இலங்கை அணியின் தடுமாற்றத்தை நன்கு பயன்படுத்திக்கொண்ட உஸ்பெகிஸ்தான் 15 – 12 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

ஆண்கள் பிரிவில் பங்குபற்றும் இலங்கை தனது முதல் 3 போட்டிகளில் உஸ்பெகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய அணிகளை வெற்றிகொண்டு நாளைய இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

இலங்கை தனது கடைசி லீக் போட்டியில் மாலைதீவுகளை இன்று மாலை எதிர்த்தாடவுள்ளது.

Previous Post

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வசூலை எட்டிய ஸ்பைடர் மேனின் புதிய பதிப்பு

Next Post

போலி நாணயத்தாள் குறித்து எச்சரிக்கை அவசியம் – மத்திய வங்கி

Next Post
போலி நாணயத்தாள் குறித்து எச்சரிக்கை அவசியம் – மத்திய வங்கி

போலி நாணயத்தாள் குறித்து எச்சரிக்கை அவசியம் - மத்திய வங்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures