மாலைதீவுகளில் நாளை 17ஆம் திகதி வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ள மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்க ஆடவர் சம்பியன்ஷிப் லீக் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இலங்கை துறைமுக அதிகார சபை அணி பங்குபற்றுகிறது.
கடந்த வருடம் இலங்கையில் நடத்தப்பட்ட தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் சம்பியனானதன் மூலம் இலங்கை துறைமுக அதிகார சபை கரப்பந்தாட்ட அணி, இந்த கழக மட்ட சுற்றுப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றது.
இலங்கை துறைமுக அதிகார சபை கரப்பந்தாட்ட அணிக்கு சமிந்த தர்ஷன தலைவராகவும் சமீர திசாநாயக்க உதவித் தலைவராகவும் நியமிக்கப்டுள்ளனர்.
இந்த அணியில் ஷெஹான் விமுக்தி, கவிந்து பபசர, லசித்த நிமேஷ், லசிது மெத்மல், ஹிருன் ரோச்சன, ருவன் சாமர, ருமேஷ் ஹசன்த, அக்கிந்து சத்சர, ரவீஷ மலிஷான், ஆலோக்க விமுக்தி ஆகிய வீரர்கள் இடம்பெறுகின்றனர்.
தலைமைப் பயிற்றுநர்: உதய ருக்மல், உதவிப் பயிற்றுநர்: ஷஷிவ் குமார, முகாமையாளர்: சலித் ப்ரியன்த.
இதேவேளை, இந்த சுற்றுப் போட்டியில் தொழில்நுட்ப பணிப்பாளராக இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் உதவித் தலைவர் கே.ஆர்.டி.சி. ரத்னமுதலி செயற்படவுள்ளார்.

அத்துடன், இந்த சுற்றுப் போட்டியின்போது மத்தியஸ்தர்களில் ஒருவராக இலங்கை துறைமுக அதிகார சபையைச் சேர்ந்த எச்.டபிள்யூ.ஜீ. சமிந்த பண்டார செயற்படவுள்ளார்.
