நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளை பரிசோதனைக்குட்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் விசேட பொறியியலாளர் ஹசலி ஹேமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று திங்கட்கிழமை (15) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொறியியலாளர் ஹசலி ஹேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் விசேட பொறியியலாளர் ஹசலி ஹேமசிங்க மேலும் தெரிவிக்கையில்,
மண்சரிவு அபாயம் உள்ள 8300 பகுதிகள் தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளை பரிசோதனைக்குட்படுத்த 50க்கும் மேற்பட்ட பொறியியலாளர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

