Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு பேரணியும் போராட்டமும்

January 22, 2020
in News, Politics, World
0

மட்டக்களப்பில் திறக்கப்பட்டுள்ள காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தினை மூடுமாறு கோரியும் காணாமல்போனவர்கள் தொடர்பில் சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தியும் நேற்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. முன்பாக கவன ஈர்ப்பு பேரணி ஆரம்பமாகி மட்டக்களப்பு நகர் ஊடாக சென்று மட்டக்களப்பு மத்திய வீதியில் திறக்கப்பட்டுள்ள காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் மாநாடு ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கு கண் துடைப்பாகவே இந்த அலுவலகம் இரகசியமான முறையில் திறக்கப்பட்டுள்ளதாக இங்கு குற்றஞ்சாட்டப்பட்டது.

யாருக்கும் அறிவிக்கப்படாமல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்திற்கு அறிவிக்கப்படாமல், ஊடகங்களுக்கு அறிவிக்கப்படாமல் குறித்த அலுவலகம் இரகசியமான முறையில் திறக்கப்பட்டுள்ளமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பினர் குற்றஞ்சாட்டினர்.

6 மாதங்களுக்கு முன்னர் காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தில் காணாமல்போன 5 பேர் தொடர்பான அனைத்து விபரங்களும் வழங்கப்பட்ட நிலையிலும் இதுவரையில் ஒருவர் தொடர்பிலும் எந்த பதிவையும் வழங்க முடியாத காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகம் தமக்கு தேவையில்லை எனவும் இங்கு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த போராட்டத்தில் வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் தலைவி திருமதி. யோகராஜா கனகரஞ்சினி, செயலாளர் லீலாதேவி அனந்தராஜா, மட்டக்களப்பு மாவட்ட தலைவி திருமதி. அமலதாஸ் அமலநாயகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் இறந்துவிட்டார் என அண்மையில் ஜனாதிபதி தெரிவித்திருந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்த வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பினர், யுத்ததின் பின்னர் தாங்கள் படையினரிடம் வழங்கிய பிள்ளைகள் எந்த யுத்ததில் உயிரிழந்தார்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தனர்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் படையினரிடம் சரணடைந்த பிள்ளைகளின் நிலைமைகளை உரிய அதிகாரிகள் வெளிப்படுத்த வேண்டும் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தரவேண்டும் இதற்கான அழுத்தங்களை சர்வதேசம் வழங்கவேண்டும் எனவும் இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

எமது பிள்ளைகள் இறந்துவிட்டது என்றால் எவ்வாறு இறந்தது, யாரால் கொல்லப்பட்டனர் என்ற விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்ததுடன், தமக்கு உள்நாட்டு பொறிமுறையில் எந்த நம்பிக்கையும் இல்லை எனவும் சர்வதேச பொறிமுறை ஒன்றின் ஊடாக தமது உறவுகள் தொடர்பான நிலையினை கண்டுபிடித்து தமக்கு வழங்க வேண்டும் எனவும் இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

Previous Post

அடுத்த மாதம் முதல் மின்சார தடையை அமுல்படுத்த நடவடிக்கை!!

Next Post

யாழ்.பல்கலை மாணவி பட்டப்பகலில் வெட்டிக் கொலை!

Next Post

யாழ்.பல்கலை மாணவி பட்டப்பகலில் வெட்டிக் கொலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

June 18, 2026
நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

June 18, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

கோட்டாபய கைது : அமைச்சர் நலிந்த வெளியிட்ட அறிவிப்பு

June 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures