மக்களின் அபிவிருத்திக்காகவே செயற்பட வேண்டும். அதுவே சிறந்தது. போக்குவரத்து மற்றும் வானூர்திச் சேவைகளின் அபிவிருத்திகள் இந்த நோக்கத்துடனே முன்னெ டுக்கப்படும்.
இவ்வாறு போக்குவரத்து மற்றும் வானூர்திச் சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.
போக்குவரத்து மற்றும் வானூர்திச் சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நேற்றுத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது-:
”அரசியல் நெருக்கடி நாட்டுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த 51 நாள்களாக இந்த நாட்டின் அனைத்துச் செயற்பாடுகளும் முடங்கியி ருந்தன. நாட்டின் பொருளாதாரத்தில் சிக்கல் நிலை தோன்றியது.
தற்போது தலைமை அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார். அமைச்சரவையும் நியமிக்க ப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் வானூர்திச் சேவைகள் தற்போது நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கை போக்குவரத்துச் சபையில் காணப்படும் பல்வேறு விடயங்களை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. மக்களை அபிவிருத்தியடையச் செய்யும் வகையில் நாம் செயற்பட வேண்டும்”. – – என்றார்.

