மகரிஷி படத்திற்கு பிறகு மகேஷ்பாபு நடித்து வரும் படம் சரிலேரு நீகேவரு. அனில் ரவிபுடி இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மகேஷ் பாபுவுடன் ராஷ்மிகா மந்தனா, விஜயசாந்தி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு திரைக்கு வரும் இப்படத்தில் ராணுவ மேஜர் அஜய் கிருஷ்ணாவாக நடித்துள்ளார் மகேஷ்பாபு.
இந்நிலையில் மகேஷ்பாபுவின் பிறந்தநாள் ஆகஸ்டு 9 என்பதால் அன்றயை தினம் சரிலேடு நீகேவரு படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், டிரைலர் என ஏதாவது வெளியாகும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அன்றைய தினம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.