முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜேராமவிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நேற்று (07.11.2023) மதியம் மின் தடை செய்யப்பட்டதாக மின்சார சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின் தடை
எனினும் பின்னர் முன்னாள் ஜனாதிபதி வசிக்கும் இந்த உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மின்சார சபையினால் மீளவும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமகாலத்தில் மின்சார கட்டணம் அதிகளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நாட்டு மக்களுக்கு பெரும் சுமை என மகிந்த சாடி வருகிறார்.
மின் கட்டணம்
இந்நிலையில் மின் கட்டணம், நீர்க்கட்டணம் என்பனவற்றை குறைக்க அழுத்தம் கொடுக்கப்படும் என மக்கள் மத்தியில் மகிந்த தெரிவித்து வருகிறார்.
மகிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசு: வீட்டுக்குள் நடந்த குழப்பம் | Electricity Cut Mahinda Home
இவ்வாறான நிலையில் மகிந்த வீட்டிலேயே மின் தடையை செய்து மின்சார சபை அவருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது