கம்பஹாவில் திவுலபிட்டிய பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த தம்பதி ஒன்று திவுலபிட்டிய பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை (07) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திவுலபிட்டிய பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்களான தம்பதி கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் திவுலபிட்டிய – மரதகஹமுல பிரதேசத்தில் வசிப்பவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களான தம்பதி நீண்ட காலமாக திவுலபிட்டிய , கட்டுவெல்லேகம, துனகஹ, அளுதேபொல, மரதகஹமுல, நெல்லிகஹமுல, நில்பனாகொட, மினுவாங்கொடை ஆகிய பிரதேசங்களில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தம்பதியிடமிருந்து 11 கிராம் 980 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 5100 மில்லிகிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களான தம்பதி இன்று சனிக்கிழமை (08) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

