பொலிசாரால் தேடப்படும் வீட்டு சொந்த காரரை ஏமாற்றி 200,000 டொலர்களை மோசடி செய்த இருவர்.

பொலிசாரால் தேடப்படும் வீட்டு சொந்த காரரை ஏமாற்றி 200,000 டொலர்களை மோசடி செய்த இருவர்.

கனடா-ரொறொன்ரோ பொலிசார் பொது மக்களை எச்சரிக்கின்றனர். வேறொருவரின் வீட்டின் மேல் போலியான அடையாளங்களை உபயோகித்து இரண்டாம் மோட்கேஜ் பெற முன்றதாக இரு சந்தேகநபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வார்டன் மற்றும் செப்பேட் அவெனியு கிழக்கில் அமைந்துள்ள சொத்து அடமான தரகரிடம் 2015 செப்படம்பர் மாதம்சென்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் வேறொருவரின் வீட்டின் மீது விண்ணப்பித்து 200,000 டொலர்கள் இவர்களிற்கு வழங்கப்பட்டுள்ளது.

உண்மையான வீட்டு சொந்தகாரரின் போலி அடையாளங்களை கொடுத்து இத் தொகையை பெற்றுள்ளனர்.

அவர்களது றியல் எஸ்டேட் வழக்கறிஞர் மூலம் பணத்தை பெற்றுள்ளனர்.

பல மாதங்களிற்கு பின்னர் மோட்கேஜ் வழங்கியவர் உண்மையான வீட்டு சொந்தக்காரரிற்கு அடமானத்தின் கடனை கட்டாத காரணத்தினால் வழக்கு தொடர்ந்திருப்பதற்காக நீதி மன்றத்தில் இருந்து நீதிமன்ற ஆவணங்களை அனுப்பியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உண்மையான வீட்டு சொந்தகாரர் பொலிசாரை தொடர்பு கொண்டு நடந்துள்ள மோசடி குறித்து தெரியப்படுத்தினார்.

பொலிசார் இரண்டு சந்தேக நபர்களின் படங்களை வெளியிட்டு இவர்களை அடையாளம் காட்ட பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருடன் 416-808-7350 அல்லது அனாமதேயமாக குற்றத்தடுப்பாளர்களுடன் 416-222-8477என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளனர்.

– See more at: http://www.canadamirror.com/canada/77410.html#sthash.7464qXGh.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News