பெண் ஒருவர் பேரூந்துக்கடியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று Montpellier நகரில் இடம்பெற்றுள்ளது.
உடலம் முற்றாக சிதைக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் உடையில் இருந்து அடையாள அட்டை ஒன்றை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். Montpellier (Hérault) நகரில் உள்ள TAM சேவை பேரூந்து ஒன்றில் அடியில் இருந்து டிசம்பர் 23 ஆம் திகதி நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்கு சற்று பின்னதாக கண்டுபிடிக்கப்பட்டது. Lavérune வீதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் உயிர் பிழைக்கவில்லை.
பேரூந்தின் பின் பகுதியில் சிக்குண்டு சில மீட்டர்கள் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டிருந்தார் என பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 60 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

