Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெரும்பான்மை உள்ளவர்கள் கையில் அரசாங்கத்தை ஒப்படையுங்கள்

December 3, 2018
in News, Politics, World
0

பெரும்பான்மை உள்ளவர்கள் கையில் அரசாங்கத்தை ஒப்படையுங்கள். இல்லையேல் உங்களை வீட்டுக்கு அனுப்பும் ஜனநாயக சக்தியும், மக்கள் சக்தியும் எங்களிடம் இருக்கின்றது என ஜனநாயக் மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

கண்டியில் 03.12.2018 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் மீண்டும் ஜனநாயகம் வெற்றி கொண்டுள்ளது. கடந்த ஒரு மாதகாலமாக அரசியல் சூழ்ச்சியினால் இந்த நாட்டின் அரசியல் நிலைமை மிக குழப்பகரமாக காணப்பட்டது. இந்த சூழ்ச்சியில் முறையற்ற ரீதியில் இந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அகற்றப்பட்டு புதிய பிரதமர் நியமிக்கப்பட்டார். அதன் பின் அரசியலமைப்பை மீறியதாக இந்த நாட்டின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கான வர்த்தமானியை முன்வைத்தார்.

இந்த பாராளுமன்ற கலைப்பு சட்டத்திற்கும், அரசியலமைப்புக்கும் முரணானது என மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்து அதற்கு நாங்கள் இடைக்கால தடை உத்தரவு ஒன்றையும் பெற்று இந்த நாட்டினுடைய அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் நாங்கள் காப்பாற்றியுள்ளோம்.

நியமிக்கப்பட்ட பிரதமருக்கும், பிரதமரால் நியமிக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் எதிராக பாராளுமன்றத்தில் ஜனநாயக ரீதியாக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து நாங்கள் 122 உறுப்பினர்களின் பெரும்பான்மையால் நிறைவேற்றியுள்ளோம்.

இலங்கையின் சட்டத்திற்கு அமைய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமித்ததும், அவரின் கீழ் கொண்டு வந்த அமைச்சரவையும் சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றத்தில் அதை தடை செய்ய கூறி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமித்ததும், அரசாங்கத்தை உருவாக்கியதும் சட்டத்திற்கு முரணானது என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, போலியான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் கூற விரும்புவது என்னவென்றால், பெரும்பான்மை உள்ளவர்கள் கையில் அரசாங்கத்தை ஒப்படையுங்கள். இல்லையேல் உங்களை வீட்டுக்கு அனுப்பும் ஜனநாயக சக்தியும், மக்கள் சக்தியும் எங்களிடம் இருக்கின்றது என்றார்.

Previous Post

பிரபாகரன் ஆயுதத்தூடாக பெற்றதை சுமந்திரன் மதிநுட்பத்தால் பெறுகிறார்!

Next Post

சிவில் உடையில் வருகைதந்து தமிழ்மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள்

Next Post

சிவில் உடையில் வருகைதந்து தமிழ்மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

June 18, 2026
நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

June 18, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

கோட்டாபய கைது : அமைச்சர் நலிந்த வெளியிட்ட அறிவிப்பு

June 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures