Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

‘புன்னைக்குடா வீதி’யின் பெயர்மாற்ற விவகாரம் | ஏறாவூர் பள்ளிவாசல் சாணக்கியனுக்கு கடிதம்

March 31, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
காபுலில் போல இலங்கையிலும் மக்கள் நாட்டை ஓடும் நிலை உருவாகும்:  சாணக்கியன்

இன ஐக்கியத்தை சீர்குலைக்கும் கிழக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கைகளை நிறுத்த குரல் கொடுக்குமாறு கோரி ஏறாவூரில் உள்ள மஸ்ஜிதுர் றிபாய் பள்ளிவாசல் நிர்வாகம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் இராசபுத்திரன் சாணக்கியனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

அக்கடிதம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

புன்னைக்குடா வீதிக்கு ‘Elmis Walgama’ என்னும் புதிய பெயர் பல நூறு ஆண்டுகாலமாக இருந்து வருகிறது.

ஏறாவூர் நகரம், ஏறாவூர்ப்பற்று ஆகிய இரண்டு உள்ளூராட்சி அதிகாரத்துக்கும், இரு பிரதேச செயலகங்களின் நிர்வாக எல்லைகளுக்கும் உட்பட்ட ‘புன்னைக்குடா வீதி’ என்ற பெயருடன் பயன்படுத்தப்படும் இவ்வீதியானது ஏறாவூர் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் ஆரம்பித்து, சுமார் 5.23 கிலோமீற்றர் நீண்டு சென்று புன்னைக்குடா கடற்கரையில் முடிவடைகிறது.

இவ்வீதி அமைந்துள்ள பிரதேசம் முழுவதிலும் 99 சதவீதமாக தமிழ், முஸ்லிம் மக்களே நிறைந்து வாழ்கின்றனர். இவ்வீதிக்கு பெயரிடக்கூடிய எத்தனையோ தமிழ், முஸ்லிம் பிரமுகர்கள் இப்பிரதேசத்தில் வாழ்ந்து மறைந்த போதிலும், இதில் யாரேனும் ஒரு தனிநபரின் பெயரை சூட்டுவதன் மூலம் ஓர் இன மக்கள் மனம் நொந்துகொள்வார்கள் என்பதால் பொதுவாக ‘புன்னைக்குடா வீதி’ என்ற பெயரையே இப்பகுதி மக்கள் மன நிறைவுடன் மிக நீண்ட காலமாகவே பயன்படுத்தி வருகின்றனர்.

இலங்கையின் வரைபடத்திலும் ஆங்கிலேயர் ஆட்சிக்கால காணி உறுதிகளிலும் இவ்வீதி புன்னைக்குடா வீதி என்ற பெயரிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் தென்பகுதியைச் சேர்ந்த சுனில் ஆரியபால என்பவரின் தலைமையில் சிலர் ஒப்பமிட்டு கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றின் மூலம் மிகப் பழைமை வாய்ந்த ‘புன்னைக்குடா வீதி’யை “Elmis Walgama” என பெயர்மாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநரும் இதனை கவனத்தில் கொண்டு சில தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. ஆளுநரின் செயற்பாட்டை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

எனவே, தயவுசெய்து தாங்கள் இவ்விடயத்தில் கரிசனை செலுத்தி, இப்பகுதியில் இன நல்லுறவுக்கு குந்தகம் ஏற்படுத்தும் இவ்வீதிப் பெயர்மாற்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி, தொடர்ந்தும் ‘புன்னைக்குடா வீதி’ என்னும் பெயரிலேயே இவ்வீதி அழைக்கப்படவும், சகல இன மக்களின் நல்லுறவு பேணப்படவும் வழிசமைக்குமாறு தயவாக கேட்டுக்கொள்கின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

கச்சதீவில் புத்தர்சிலையை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுங்கள் | திருமாவளவன்

Next Post

குருந்தூரில் மலைக்கு நேரடி விஜயத்தை மேற்கொண்டு வலிதான கட்டளை ஒன்றை நீதிமன்றம் வழங்க வேண்டும்

Next Post
வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் உடைத்து எறியப்பட்டன!

குருந்தூரில் மலைக்கு நேரடி விஜயத்தை மேற்கொண்டு வலிதான கட்டளை ஒன்றை நீதிமன்றம் வழங்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures