வெளிநாடுகளுக்குப் பயணம் செல்ல அலுவலகத்தில் நாம் விடுப்பு எடுப்பது வழக்கம்.
உடல்நிலை சரியாக இல்லையென்றால் மருத்துவ விடுப்பு எடுப்பதும் வழக்கம்.
ஆனால், ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ள அமெரிக்க நிறுவனம் சிலவற்றில் புது வகையான விடுப்பு அறிமுகம் கண்டுள்ளது.
செல்லப்பிராணி விடுப்பு என்பதே அது.
புதிய செல்லப்பிராணிகளை வீட்டிற்குக் கொண்டுவரும்போது அவை புதிய சூழலுக்குப் பொருந்திக்கொள்கின்றவா என்பதைக் கண்காணிக்க இந்த விடுப்பு அனுமதிக்கிறது.
அத்துடன் செல்லப்பிராணிகளின் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும்போது அவற்றை விலங்கு மருத்துவரிடம் கொண்டுசெல்ல உரிமையாளர்கள் இந்த விடுப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
செல்லப்பிராணிகளுடன் நேரம் செலவிட்டுக்கொண்டே வீட்டிலிருந்து பணிபுரிவதற்கும் சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அனுமதிக்கின்றன.
இம்மாதிரியான ஊழியர் அனுகூலங்களின் மூலம், நிறுவனங்கள், புதிய ஊழியர்களை ஈர்க்கவும் முயற்சி செய்கின்றன.