அறிமுக நாயகன் அர்ஜுன் பிரபாகரன் கதையின் நாயகனாக புரட்சிகரமான வேடத்தில் நடித்திருக்கும் ‘பேட்டில் ‘ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இன்றைய இளம் தலைமுறையினரின் புரட்சி பாடகராக பிரபலமான வேடன் வெளியிட்டிருக்கிறார்.
இயக்குநர் பா. நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேட்டில்’ படத்தில் அர்ஜுன் பிரபாகரன், ஆராத்யா, முனிஸ்காந்த், சரவண சுப்பையா, சுப்பிரமணியம் சிவா, சுருளி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர் யுவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீவா இசையமைத்திருக்கிறார்.
போதை பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எலைட் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. பாஸ்கரன் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் – குறிப்பாக பாடசாலையில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு போதைப்பொருள் பாவனை குறித்த காட்சிகள் மற்றும் சமூக புரட்சிக்கு றாப் பாடல் ஆகியவை.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
