விஜய் சேதுபதி தற்போது தயாரித்து நடித்து வரும் படம் லாபம். இதனை இயற்கை, பேராண்மை, ஈ, புறம்போக்கு படங்களை இயக்கி எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார். விஜய் சேதுபதியுடன் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இமான் இசை அமைக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் மதுரையை சுற்றி நடந்து முடிந்துள்ளது. இது விவசாயத்தை மையப்படுத்திய கதை. விவசாயத்தை அழிக்க நினைக்கும் ஒரு தொழில் நிறுவனத்திற்கும், அதை எதிர்த்து போராடும் மக்களுக்குமான கதை என்கிறார்கள். இதில் விஜய் சேதுபதி மக்களை போராட்டதுக்கு ஒருங்கிணைக்கும் களப்பணியாளராக நடித்துள்ளார்.
இந்த படத்தின் பர்ஸ்லுக் நேற்று வெளியிடப்பட்டது. அதில் விஜய் சேதுபதி களப்பணியாளர் தோற்றத்தில் இருக்கிறார். கையில் மைக், தோளில் ஸ்பீக்கருடன் மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது போன்றும், போராடும் மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்துவது போன்றும் பர்ஸ்ட்லுக்கில் சித்தரிக்கப்பட்டுள்ளது.