Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

புதிய ஆப் தொடங்கினார் சுரேஷ் மேனன்

December 10, 2018
in Cinema
0

பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் சுரேஷ்மேனன். புதிய முகம், பாசப்பறவைகள் உள்பட சில படங்களை இயக்கி உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, தானா சேர்ந்த கூட்டம், ஜூங்கா படங்களில் வில்லனாக நடித்தார். காளிதாஸ், பொன் மாணிக்கவேல், அடங்க மறு உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். சுரேஷ் மேனன் தற்போது மை கர்மா என்ற புதிய ஆப் தொடங்கி உள்ளார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்னால் பரிசு தரும் ஆப் இது. இதுகுறித்து அவர் கூறியதாவது:

என்னை ஒரு ஒளிப்பதிவாளராக, இயக்குனராக, நடிகராக பார்த்திருப்பீர்கள். 40 வருடமாக இந்த துறையில் இருந்து வருகிறேன். சினிமா இயக்கியிருக்கிறேன், டிவி சீரியல்கள், பல்வேறு டாகுமெண்டரிகள் எடுத்திருக்கிறேன். தற்போது லூசிபர், அடங்க மறு, காளிதாஸ், பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்.

நடிப்பதை தாண்டி பல்வேறு சமூக வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வம் உண்டு. மக்கள் பயன்பெறும் நிறைய திட்டங்களை வடிவமைத்து தந்திருக்கிறேன். கண்டெய்னர் மூலம் பெண்களுக்கு கழிப்பிடம் கட்டி கொடுத்திருக்கிறேன். சென்னை காவல்துறைக்கு பல ட்ராபிக் கண்ட்ரோல் ஐடியாக்கள் செய்து கொடுத்திருக்கிறேன். ஒரு குடிமகனாக இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன்.

மை கர்மா ஆப்பை உருவாக்க முக்கிய காரணம் இந்த தலைமுறைக்கு பொது அறிவை பற்றிய புரிதலோ, ஈடுபாடோ இல்லை. அவர்களை ஈர்க்க மொபைலில் இந்த மாதிரி ஒரு ஆப் உருவாக்க நினைத்தேன். முழுக்க முழுக்க இது மொபைல் யுகம். ஆப் தான் எதிர்காலம். அதனால் தான் இதை தேர்ந்தெடுத்தேன். இதில் எனக்கும் பயனாளிக்கும் மட்டுமே நேரடி தொடர்பு. நடுவில் எந்த ஏஜண்டும் கிடையாது. மக்கள் டிஜிட்டல் மணியை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மொபைலை மட்டுமே உலகம் என நினைத்திருக்கிறார்கள். கர்மா என்பது தேசிய அளவில் தெரிந்த ஒரு வார்த்தை. அதனால் இந்த அப்ளிகேஷனுக்கு அந்த பெயரை வைத்திருக்கிறோம்.

இந்த க்விஸ் விளையாட்டில் கேள்விக்கு 4 சாய்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். இதை விளையாடுவதன் மூலம் தெரியாத விஷயங்களை கூட தெரிந்து கொள்ளலாம். இரவு 7 முதல் 9 மணி வரை தினமும் இந்த விளையாட்டை விளையாடலாம். இதில் விளையாடி பொது அறிவை வளர்க்கலாம், பணம் சம்பாதிக்கலாம், பொது சேவை செய்யும் அமைப்புகளுக்கு நீங்கள் உதவலாம். முதல் கட்டமாக அருணோதயா சேவை அமைப்புக்கு நாங்கள் உதவியிருக்கிறோம்.

90 சதவிகித கேள்விகள் இந்தியாவை பற்றியது தான். இதுவரை 4000 பேர் இந்த ஆப்பை டவுன்லோடு செய்திருக்கிறார்கள். ஒரு சில நண்பர்களின் பொருளாதார பங்களிப்புடன் இதை உருவாக்கியிருக்கிறோம். ஒரு சில இளைஞர்கள் என்னுடன் இணைந்து வேலை செய்து வருகிறார்கள். நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறோம்” என்றார்.

Previous Post

சமுத்திர புத்திரன் : தமிழில் வெளிவரும் ஹாலிவுட் படம்

Next Post

பல கோடிகளை வசூலித்த நவம்பர் மாதம்

Next Post

பல கோடிகளை வசூலித்த நவம்பர் மாதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

June 20, 2026
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

June 20, 2026
‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures