Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பிரேக் -அப் கலாச்சாரத்தின் பின்னணியை சுவராசியமாக பேசும் ‘பூக்கி’

February 10, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
விஜய் அண்டனியின் ‘பூக்கி ‘ பட புதிய பாடல் வெளியீடு

‘ககன மார்கன்’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அஜய் திஷான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பூக்கி’ எனும் திரைப்படம் – காதலர்களுக்கு இடையே சர்வ சாதாரணமாக நடைபெறும் பிரேக்கப் எனும் கலாச்சாரத்தின் பின்னணியை வணிக அம்சங்களுடன் சுவாரசியமாக விவரிக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் மற்றும் அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பூக்கி ‘ எனும் திரைப்படத்தில் அஜய் திஷான், ஆர். கே. தனுஷா, லட்சுமி மஞ்சு, அஸ்வின் ராம், பிரியங்கா மஸ்தானி, சத்யா, பேபி ஷன்விகா ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் புதிய பரிதி கதை எழுத விஜய் அண்டனி இசையமைத்துள்ளார். காதல் கதையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜய் அண்டனி ஃபிலிம் கொர்ப்பரேசன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஃபாத்திமா விஜய் அண்டனி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை மீரா விஜய் அண்டனி வழங்குகிறார்.

காதலர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 13 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பட குழுவினருடன் இயக்குநர் சசி சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார்.

இந்நிகழ்வில் படத்தைப் பற்றி அறிமுக நாயகன் அஜய் திஷான் பேசுகையில், ” இந்த படத்தில் பணியாற்றியது என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய அனுபவம். நான் ஒருபோதும் நினைத்திராத பல விடயங்கள் இப்படத்தின் மூலம் நடந்திருக்கிறது. கதையை முதலில் வாசித்த போது இந்தப் படம் ஆழமான எழுத்துடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பதை உணர்ந்தேன். இளைய தலைமுறையினரிடத்தில் குறிப்பாக காதலர்களிடத்தில் பிரேக் அப் என்பது இன்று பெசனாகிவிட்டது. அதனுடைய பின்னணியை இந்த படைப்பு சுவராசியமாக ஆராய்கிறது. இதில் எம்முடைய பங்களிப்பை திரையில் நேர்த்தியாக வழங்கியதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Previous Post

மசாலா மணத்துடன் மகிழ்வித்து வரும் ஐஸ்வர்யா அர்ஜுனின் ‘சீதா பயணம் ‘ படத்தின் முன்னோட்டம்

Next Post

கோட்டாபய ராஜபக்ச சிஐடிக்கு அழைப்பு!

Next Post
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

கோட்டாபய ராஜபக்ச சிஐடிக்கு அழைப்பு!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures