பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவின் ஹாரோ தென் பகுதியில் இந்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த குறித்த இலங்கையர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நாற்பது வயதான விமல் என்ற இலங்கை தமிழரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கத்திக்குத்து தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, அண்மைக்காலமாகவே பிரித்தானியாவில் கத்திக்குத்து தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
குறித்த கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு இலங்கை தமிழர்கள் உயிரிழந்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

