Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரான்ஸ் கடற்கரைகளில் இறந்து கரை ஒதுங்கும் டால்பின்கள்

March 31, 2019
in News, Politics, World
0

பிரான்ஸ் கடற்கரைகளில் இறந்து ஒதுங்கும் டால்பின்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இறந்த டால்பின்களின் உடல் பாகங்கள் சேதப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளது கவலையை அளிக்கும் முக்கிய விடயம் என்றாலும், அதைவிடவும் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இதுவரை சுமார் 1,100 டால்பின்கள் கொல்லப்பட்டிருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தொழில் முறை மீன்பிடிப்புதான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், டால்பின்கள் உயிரிழப்பை தடுத்து நிறுத்த தேசிய அளவில் திட்டம் ஒன்றை வகுக்குமாறு சுற்றுச்சூழல் அமைச்சரைக் கேட்டுக் கொண்டுள்ளனர்

90 சதவிகிதம் டால்பின்கள் உயிரிழப்பதற்கு, அவை மீன் பிடி வலைகளில் சிக்கிக் கொள்வதுதான காரணம் என்கின்றனர் அவர்கள்.

மீன் பிடிப்பவர்கள் தங்கள் வலைகளில் டால்பின்கள் சிக்கிக் கொள்ளும்போது, அவை தங்கள் வலையை சேதப்படுத்திவிடக்கூடாது என்பதற்காக அவற்றின் உடல் பாகங்களை வெட்டி எறிந்து விடுகின்றனர்.

இது தெரிந்த விடயம்தான் என்றாலும், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஏன் இறந்த டால்பின்களின் எண்ணிக்கை இவ்வளவு அதிகரித்தது என்று கேள்வி எழுப்புகின்றனர்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் சுற்றுச்சூழல் நலனை ஆதரிப்பவர் என்பதால் சுற்றுச்சூழல் அமைச்சருக்கு சிக்கல்தான் என்று தோன்றுகிறது.

இதற்கிடையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர், இந்த டால்பின்கள் உயிரிழப்புக்கும், தடை செய்யப்பட்டிருந்த மீன்பிடி முறை ஒன்றிற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு மீண்டும் அனுமதியளிக்கப்பட்டதற்கும் தொடர்பு இருப்பதாக தான் கருதுவதாக தெரிவிக்கிறார்.

Hake fishing என்னும் அந்த முறையில், வேகமாக செல்லும் படகின் பின்னால் கட்டப்பட்டிருக்கும் வலைகளின் மீன்கள் சிக்கிக் கொள்ளும். அந்த வகையில் டால்பின்களும் சிக்கிக் கொள்வதுண்டு.

தற்போது நல்ல விலைக்கு விற்கப்படும் sea bass எனப்படும் மீன்கள் இவ்வகையில் பிடிக்கப்படுகின்றன.அவ்வகை மீன்களை பிடிக்கும் Hake fishing என்னும் அந்த முறையில்தான் அதிக டால்பின்கள் சிக்கி உயிரிழப்பதாகவும் அந்த சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார்.

சூற்றுச்சூழலை காக்க விரும்புவதாக கூறும் இமானுவல் மேக்ரான்தான் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் அவர்

Previous Post

ஆப்கானில் தலீபான்களுடன் சண்டை

Next Post

சிறுவனை கொன்று பீரோவில் மறைத்த பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை..!!

Next Post

சிறுவனை கொன்று பீரோவில் மறைத்த பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures