பிராங்பேர்ட் ரயில் நிலையத்தில் கத்தியால் தாக்கிய மர்ம நபர்: 4 பேர் படுகாயம்
ஜேர்மனியின் பிராங்பேர்ட் ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கி விட்டு தப்பிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் பிராங்பேர்ட் ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்த ரயில் நிலையத்தில் இருந்து தப்பித்து மாயமானதாக கூறப்படுகிறது. குறித்த நபரை பிடிக்கும் நோக்கில் பொலிஸார் விரைந்துள்ளனர்.
குறித்த தாக்குதலின் நோக்கம் குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் திரளான பொலிஸார் மற்றும் மீட்பு குழுவினர் முகாமிட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு பாதுகாப்ப்பு கருதி சம்பவம் நடந்த பகுதியை அதிகாரிகள் மூடியுள்ளனர்.
படுகாயமடைந்த நான்கு நபர்களையும் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சேர்ப்பித்துள்ளனர். காயமடைந்தவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் எவரும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.












