கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று(07) பிற்பகல் நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கையெழுத்தானது.
தற்போதைய அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்கள் பாடத்தில் பல பிழைகள் மற்றும் மாணவர்களின் மனதிற்குப் பொருத்தமற்ற விஷயங்களைச் சேர்ப்பது குறித்து சரியான நடவடிக்கை எடுக்காததால், எதிர்க்கட்சி அத்தகைய நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர முடிவு செய்தது.
முதலில் கையெழுத்திட்ட சஜித்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முதலில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் முதலில் கையெழுத்திட்டார்.

இதேவேளை இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மூலம் அரசாங்கத்திற்கு எவ்வித சிக்கல்களும் ஏற்படப்போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

