சிங்கள எழுத்தாளரும், கவிஞருமான ஷக்திக சத்குமார பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் எழுதிய சிறுகதையொன்று பௌத்த மதத்தை அவதூறு செய்யும் விதமாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பௌத்த விகாரையொன்றிற்குள் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறுவதாக கதை அமைந்திருக்கிறது. இது தொடர்பாக பௌத்த அமைப்பொன்று வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைதிற்கு எதிராக கலைஞர்களும், எழுத்தாளர்களும் கண்டனங்களை பதிவுசெய்து வருகிறார்கள். கருத்து சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக அந்த கண்டனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

