Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பாடதிட்டத்துக்கு முன் பரீட்சை முறையில் மாற்றம் கொண்டு வருவது சரியா? – ‘உறியடி’ விஜயகுமார் கேள்வி

September 10, 2017
in Cinema
0

பாடதிட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு முன் பரீட்சை முறையில் மாற்றம் கொண்டு வருவது சரியா என ‘உறியடி’ இயக்குநர் விஜயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்குக் கேட்டு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தற்கொலையைத் தொடர்ந்து, நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக ‘உறியடி’ இயக்குநர் விஜயகுமார் தனது ஃபேஸ்புக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கிராமப்புரத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், அந்த பாடதிட்டத்தை பயில்வதால் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியுமா? இல்லையெனில் அவர்களின் மேற்படிப்பு லட்சியத்தை நீட் தட்டிப் பறிக்கிறது என்பது தானே உண்மை. வறுமையிலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்னும் அவர்களின் கனவை சிதைக்கிறது என்பது தானே நிதர்சனம்.

இது தவறு எனும்போது அதற்கு எதிராக போராட வெண்டியது தானே கடமை. அன்றாட வாழ்க்கை இன்னல்களுக்கு இடையே போராட முடியாதவர்கள், மக்கள் சேவை செய்பவர்கள் எனக் கூறும் அரசியல் கட்சிகளிடம் நமக்காக போராட வலியுறுத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் கூறிய படி, அமைதியாகப் போராட அவர்களின் சமூக ஊடகங்களின் வாயிலாக கோரிக்கை வைக்க வேண்டும்.

பொழுதுபோக்கைத் தவிர்க்க முடியாதெனும்போது, தெருவில் இறங்கிப் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம் சார்ந்த விஷயங்களை ஆதரிக்கலாமே.

பொழுது போக்கு விஷயங்களை trend செய்யும் போது நம்மை ஏளனமாகப் பார்ப்பது போலாகி விடாதா.

சாதியின் பேரால் நாம் பிரிவு பட்டு பேசுவது வேதனையான விஷயமாகியுள்ளது. எந்த சாதியினரோ, மதத்தினரோ, பின்னால் வரும் அனைவரும் ஒழுங்காக வாகனம் ஓட்டினால் தான் நாம் உயிரோடு வீடு சென்று சேர முடியும். உயிர் காக்கும் மருத்துவர் வேறு சாதி / மதத்தினவர் என்பதாலோ, தானமாகக் கிடைக்கும் உடல் உறுப்புகள் / இரத்தம், வேறு சாதி / மதத்தவருடையது என்பதாலோ அவர் தயவு வேண்டாம் என எவரும் உயிரை விட்டு விடப் போவதும் இல்லை.

ஒருவரை ஒருவர் சார்ந்தது தான் வாழ்க்கை. இங்கே எவர் ஒருவரும் எவருக்கும் உயர்ந்தவரும் இல்லை, எவருக்கும் தாழ்ந்தவரும் இல்லை. நாம் இந்த குறிப்பிட்ட சாதி/மதத்தில் தான் பிறக்க வேண்டும் என முடிவு செய்ய முடியுமா?

சாதி/மத பாகுபாட்டு எண்ணங்களை தவிர்ப்பதே சாதி ஒழிப்பிற்கான வழி. சாதி அரசியல் செய்பவர்கள் உண்மையில் அந்த சாதி மக்கள் முன்னேற்றத்திற்காக செய்கிறார்களா என்பதை நமக்குள் சிந்தித்துப் பார்ப்போம்.

பொருளாதார ரீதியாக அனைவரும் முன்னேறுவது தான் சாதி ஒழிப்பிற்கு வழி வகுக்கும். அதற்கு அனைவரும் கல்வி பெறுவதே தீர்வு. இந்திய அரசியல் அமைப்பு அனைவருக்கும் தரமான வாழும் உரிமையை உறுதி அளிக்கிறது. அதில் கல்வியும், மருத்துவமும் இடம் பெற வலியுறுத்துவோம். அது வியாபாரமாக்கப் படுவது தவிர்க்கப்பட வேண்டும்

இவ்வாறு விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Previous Post

‘லயன்’ மெஸ்ஸி ஹாட்ரிக்: இஸ்பான்யால் அணியை நொறுக்கியது பார்சிலோனா

Next Post

மணிரத்னம் படத்தில் இணையும் சிம்பு – கொண்டாடும் ரசிகர்கள்

Next Post
மணிரத்னம் படத்தில் இணையும் சிம்பு – கொண்டாடும் ரசிகர்கள்

மணிரத்னம் படத்தில் இணையும் சிம்பு - கொண்டாடும் ரசிகர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

மகிந்தவின் மகன் யோஷிதவின் வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

July 17, 2026
சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் தொடக்க விழா

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் தொடக்க விழா

July 17, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

July 16, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்தன அபேரத்ன

July 16, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures