ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவிற்கும், பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு செவ்வாய்க்கிழமை (21) பகல் பொதுஜன பெரமுனவின் நெலும் மாவத்தையில் உள்ள உத்தியோகப்பூர்வ காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை அநுராதபுரம்நகரில் நடத்த தீர்மானிக்கப்பட்டடிருந்தது.
தபால்மூல வாக்கெடுப்பு பிற்போடப்பட்டதை தொடர்ந்து மார்ச் மாதம் 09 ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்து நிச்சயமற்ற தன்மை காணப்படுகிறதால், தேர்தல் பிரசார கூட்டம் தொடர்பில் ஒரு தீர்மானத்தை இன்று எடுக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
முன்னாள் நிதியமைச்சர் பஷில் தலைமையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் கட்சி பதவிகள் மறுசீரமைப்பு,புதிய அமைச்சரவை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றவுடன் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் அதிருப்தி வெளிப்படுத்தவுள்ளதாக ஆளும் தரப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.திட்டமிட்ட வகையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்த தீர்மானித்துள்ளனர்.