கொள்ளை உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்காக தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவர் சீகிரியா பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சீகிரியா – பொத்தானை சந்தியில் குறித்தநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கலேவெல- மொரொத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதான நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிமிருந்து தொரட்டியாவ பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொள்ளையிடப்பட்ட மோட்டார்சைக்கிளொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் வேறு பிரதேசங்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்காக குறித்த நபர் மீது பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சீகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
#No 1 TamilWebSite
| http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]












