Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துசெய்ய வலியுறுத்தும் கையெழுத்து போராட்டம் இன்று கொழும்பில்

February 15, 2022
in News, Sri Lanka News
0
நீதிபதி மீதான தாக்குதல்: 25ம் திகதி பல இடங்களில் கண்டன போராட்டம்

பயங்கரவாத தடை சட்டத்தை இரத்து செய்வதாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்திய கையெழுத்துப்போராட்டம் இன்று காலை  11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடத்தப்படும்.

இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினரும், இந்த நடவடிக்கைகளுக்கான  ஒருங்கிணைப்பாளருமான எம்.எ.சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதானது,

1979 ஆம் ஆண்டு ஆறு மாதங்களுக்கு தற்காலிக ஏற்பாடுகள் சட்டமாக கொண்டுவரப்பட்ட ஆனால் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்தும் அமுலில் உள்ள கொடூரமான பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் கையொப்பமிடும் பிரசார நடவடிக்கை ஒன்றினை நாம் ஆரம்பித்துள்ளோம்.

அன்றைய அரசாங்கத்திற்கு எதிரான அதிருப்தியை நசுக்குவதற்கு இது பயன்படுத்தப்பட்டதை இக் காலகட்டத்தில் நாங்கள் கண்டோம். இது கடந்த காலங்களில் தொடர்ந்து செய்யப்பட்டது போல இன்றும் தொடர்கின்றது.

இந்த சட்டம் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக சர்வதேச மனித உரிமைகள் தர நிலைமைகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க புதிய சட்டம் இயற்றப்படும் என்று அரசாங்கம் கடந்த காலங்களில் பல உறுதிமொழிகளை வழங்கியது.

எவ்வாறாயினும் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட திருத்தச்சட்டமூலமானது அத்தகைய உத்தரவாதங்களுக்கு  ஏற்றதாக இல்லாதிருப்பதோடு பயங்கரவாத தடை சட்டத்தில் உள்ள எந்தவொரு கடுமையான விதிகளையும் நிவர்த்தி செய்யத் தவறியுள்ளது.

இந்த நாடு தழுவிய பிரசாரம் பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய்வதாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்துவதாகவும். கொழும்பில் இக் கையெழுத்து பிரசாரம் 2022 பெப்ரவரி 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணி (இன்று) முதல் பிற்பகல் 1 மணி வரை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடத்தப்படும்.

தயவாக எம்முடன் சேர்ந்து இப் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை ரத்து செய்வதற்கான மனுவில் கையெழுத்திடுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

கருத்துச்சித்திரம்

Next Post

உக்ரேனிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அவதானம்

Next Post
48 மணி நேரத்திற்குள் ரஷ்யாவுடன் பேச்சார்த்தை நடத்த உக்ரேன் விருப்பம்

உக்ரேனிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அவதானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures