Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயங்கரவாத அமைப்புகளை அழிக்க பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

February 28, 2019
in News, Politics, World
0

பயங்கரவாத அமைப்புகளை அழிக்க பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸை தொடர்ந்து ஜப்பானும் பாகிஸ்தானுக்கு அழுத்தம் தந்துள்ளது.

இந்தியா – பாக். தாக்குதல்களும் இந்திய விமானி சிறைப்பிடிப்பும்

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடி தரும் விதமாக, இந்திய விமானப்படையின் மிராஜ்-2000 போர் விமானங்கள், நேற்று முன்தினம் அதிகாலை எல்லை கட்டுப்பாடு கோட்டை தாண்டி, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தது. பாலகோட்டில் அடர்ந்த வனப்பகுதிக்குள் இருந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் மிகப் பெரிய முகாம் மீது ஆயிரம் கிலோ குண்டுகளை வீசி, 350 தீவிரவாதிகளை தூங்கிக் கொண்டிருந்த போதே கூண்டோடு ஒழித்துக் கட்டியது.

பாலகோட் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்துவதற்காக நேற்று அதிகாலை காஷ்மீர் எல்லையை தாண்டி வந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய போர் விமானங்கள் விரட்டி அடித்தன. நடுவானில் நடந்த இந்த பரபரப்பான சண்டையின் போது, பாகிஸ்தானின் எல்லைக்குள் புகுந்து அந்நாட்டின் எப்-16 போர் விமானம்  ஒன்றை சுட்டு வீழ்த்தியது. அதேபோல், பாகிஸ்தானும் இந்தியாவின் மிக் -21 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. அதை இயக்கிய சென்னை விமானி அபிநந்தனை அந்நாடு சிறை பிடித்தது..இதையடுத்து அபிநந்தனை மீட்க ராஜாங்கரீதியிலான நடவடிக்கையை மத்திய அரசு விரைவுபடுத்தி வருகிறது.

அண்டை நாடுகள் கவலை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சீனா மட்டுமின்றி இலங்கை, நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன. இரு நாடுகளும் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டுமென அனைத்து நாடுகளும் ஒட்டு மொத்தமாக குரல் கொடுத்து வருகின்றன.

சர்வதேச நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு 

இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையே போர் மூள்வதை தடுக்க, சர்வதேச நாடுகள் முயற்சியில் இறங்கியுள்ளன. சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காணும்படி வலியுறுத்தி வருகின்றன. ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாமை அழிக்க இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பேசினார்.பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாமை இந்தியா அழிப்பதை ஆதரிப்பதாக பேசினார்.

தீவீரவாதிகளுக்கு பாக். புகலிடம் வழங்க கூடாது : அமெரிக்கா 

இந்தியாவும், பாகிஸ்தானும் எல்லையில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என அமெரிக்க வேண்டுகோள் விடுத்துள்ளது. எல்லையில் அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளை இருநாடுகளும் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ராணுவ நடவடிக்கை தொடர்ந்தால் இருநாடுகளிலும் பதற்றம் அதிகரிக்கும் தற்போதையை பதற்றத்தை தணிக்க இருநாடுகளும் நடவடிக்கை எடுத்து, நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்க வலியுறுத்தியுள்ளது. தீவீரவாதிகளுக்கு புகலிடம் வழங்க கூடாது எனவும், அவர்களுக்கு நிதியுதவி கிடைப்பதை தடை செய்யுமாறும் பாகிஸ்தான் அரசை வலியுறுத்துவோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா, சீனா அறிவுரை

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் எல்லையில் நேற்று முன்தினம் நுழைந்த போதே, இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் சமாதானமடைய வேண்டுமென சீனா வலியுறுத்தியது. இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லு காங்க் விடுத்துள்ள அறிக்கையில், ‘தற்போது நடந்து வரும் சம்பவங்களை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்தியாவும், பாகிஸ்தானும் தெற்காசியாவின் முக்கியமான நாடுகள். எனவே, இரு நாடுகளும் சண்டையை நிறுத்திக் கொண்டு, பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை சர்வதேச ஒத்துழைப்புடன் இந்தியா மேற்கொள்ள வேண்டும்’ என கூறியுள்ளார். இதேபோல், ரஷ்யாவும் பேச்சு நடத்தும்படி கூறியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் குழல் கவலை தருகிறது : பிரிட்டன் 

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் குழல் மிகவும் கவலை அளிக்கிறது என்று பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறியுள்ளார். பிரச்னை மேலும் தீவிரமாவதை தடுத்து நிறுத்த இரு நாடுகளும் முன்வர வேண்டும். இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்  என அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு ஜப்பான் வெளியுறவுத்துறை அழுத்தம்

பயங்கரவாத அமைப்புகளை அழிக்க பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸை தொடர்ந்து ஜப்பானும் பாகிஸ்தானுக்கு அழுத்தம் தந்துள்ளது.  பதற்றத்தை தணிக்க இருநாடுகளும் ராணுவ நடவடிக்கைளை தவிர்க்க வேண்டும் எனவும் ஜப்பான் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் போர் பதற்ற சூழலை நீக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் டோரா கோனா கேட்டுக் கொண்டுள்ளார்.

Previous Post

சுட்டு வீழ்த்தப்பட்ட பாக். போர் விமான புகைப்படம் வெளியீடு!

Next Post

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பிரச்சனை சுமுகமாக தீரும் : டிரம்ப்

Next Post

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்சனை சுமுகமாக தீரும் : டிரம்ப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026

Recent News

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures