Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்!

February 28, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்!

பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக சனிக்கிழமை (28) யாழ்ப்பாணத்தில் மாபெரும் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டத்தை அரசு கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்ற நிலையில், அந்த சட்டமானது மிகவும் மோசமானது என தெரிவித்து, புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம் என்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நூலகத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த போராட்டம் ஏ-9 வீதியூடாக பேரணியாக சென்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை சென்றடைந்து அங்கு நிறைவுற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி “புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம், வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு நீதி வேண்டும், இனப்படுகொலை இராணுவமே வெளியேறு, என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் தவத்திரு வேலன் சுவாமிகள், மத குருக்கள், சமூக மட்ட சிவில் அமைப்புக்கள், அரசியல் பிரமுகர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், இளைஞர்கள் மற்றும் யுவதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Previous Post

எங்களை அடக்கியாள சிங்கள அரசுகள் பயன்படுத்திய சட்டம் நீக்கப்பட வேண்டும் – வேலன் சுவாமிகள் 

Next Post

மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Next Post
மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures