பனிப்பாறையில் இருந்து டைட்டானிக் கப்பலை அகற்ற முயற்சிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பனிப்பாறையில் மோதிய டைட்டானிக் கப்பலை மீட்க முயற்சிப்பதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் முன் செல்ல முடிந்தால் சாதகமான சூழ்நிலையை உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
அந்நியச் செலாவணியைப் பாதுகாப்பதே முதலில் செய்ய வேண்டும். இறக்குமதியை மட்டுப்படுத்தி எரிபொருள், உரம், மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் இந்த செயற்பாடுகள் சிறப்பாக அமையவில்லை என தெரிவித்த ஜனாதிபதி, தற்போது நல்லதொரு நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த இரண்டு வருடங்களை முகாமைத்துவப்படுத்த வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 32ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, விவசாயம் உட்பட அனைத்திற்கும் வரி அறவிட வேண்டியுள்ளதாகவும் எமக்கு வேறு வழியில்லை எனவும் தெரிவித்துள்ளார்.