Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பண்பாட்டின் இசைமரபில் முகிழ்த்த  ஆளுமை ஸ்ரீ குகன் | முன்னாள் துணைவேந்தர் என். சண்முகலிங்கன் பாராட்டு

October 22, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பண்பாட்டின் இசைமரபில் முகிழ்த்த  ஆளுமை ஸ்ரீ குகன் | முன்னாள் துணைவேந்தர் என். சண்முகலிங்கன் பாராட்டு

எங்கள் பண்பாட்டின் இசைமரபில் முகிழ்த்தஆளுமை ஸ்ரீ குகன் : முன்னாள் துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் பாராட்டு

ஈழத்து இசையமைப்பாளர் ஸ்ரீ குகனின் இசையமைப்பில் உருவான 100 ஸ்ரீ குகன் 100 –  வெளியீட்டுவிழா அண்மையில் (18.10.2024)  நாச்சிமார் கோயிலடி சரஸ்வதி மண்டபத்தில்  இடம் பெற்ற வேளை பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த யாழ்.பல்கலைக்கழக  முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்  ’எங்கள் பாரம்பரிய இசைக்கலைஞர் சுப்பையாபிள்ளையின் பேரன்;கதாகாலக்‌ஷேப கலைஞர் கணேச சுந்தரத்தின் புதல்வன்; மாரபார்ந்த கலைஞானம் ,பயில்வு  -இவற்றினடியான படைப்பாக்கதிறன் ;கூடவே நவீன தொழினுட்ப த்திலான தாடனம் ; இவற்றின் சங்கமமாய் எங்கள் தலங்களை பாடல் பெற்ற தலங்களாக்கும் ஸ்ரீ குகன் படைப்பாக்கம், பண்பாட்டு பெறுமதியானது,  பக்தி இயக்கத்தின் விரிவாக்கமாகவும் தமிழிசையில் படிமலர்ச்சியாகவும்  தொடர்வது ; இவ்விசையாக்கத்தில் கலந்த கவிஞர்கள், பாடகர்கள், இசையாக்கத்திற்கு ஆதரவான ஆலய தர்மகர்த்தாக்கள் எம் பாராட்டுக்குரியவர்கள் ‘என்றார்.

வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்புவிருந்தினராக கவிஞர் ஜெயசீலன், இசைவாணர் கண்ணன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .

கவிஞர் வேலணையூர் சுரேஷ் வரவேபுரை வழங்கினார்.கல்வியியல் விரிவுரையாளர் இ. சர்வேஸ்வரா வெளியீட்டுரை நிகழ்த்தினார்,பிரதம விருந்தினர் பேராசிரியர் சண்முகலிங்கன் இசை இறுவெட்டினை வெளியிட்டு வைத்தார்; முதல் பிரதியினை ச,சஞ்சீவ்பாபு பெற்றுக் கொண்டார். கவிஞர் வீரா நயப்புரை வழங்கினார், நிகழ்வில் ஏழிசை மிருதங்க நர்த்தனாலய மாணவிகளின் நாட்டிய அர்ப்பணமும் ஸ்ரீ குகன் இசையில் சப்தஸ்வரா இசைக்குழுவினரின் இன்னிசை கானங்களும் இடம்பெற்றன.

Previous Post

பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு – ஜனாதிபதி அநுர அறிவிப்பு

Next Post

வடக்கு கிழக்கில் உள்ள இளைஞர்,யுவதிகள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும் | செல்வம் 

Next Post
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த எமது மக்களை பிரித்தானியா அரவணைத்தது – செல்வம் 

வடக்கு கிழக்கில் உள்ள இளைஞர்,யுவதிகள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும் | செல்வம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures