நேற்று, திங்கட்கிழமை Beauval Zoo சென்றிருந்த நாட்டின் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன், அங்கு பண்டா குட்டி ஒன்றுக்கு பெயர் சூட்டினார்.
இது தொடர்பாக முன்னதாக பல செய்திகளை வழங்கியிருந்தோம். இந்நிலையில் Beauval மிருகக்காட்சி சாலையில் பிறந்து நான்கு மாதங்கள் ஆன பண்டா குட்டி ஒன்றுக்கு சீனாவின் பூர்வாங்க பெயரான Yuan Meng எனும் பெயரை சூட்டினார். தவிர தனது உத்தியோகபூர்வமான முதல் உரையையும் ஆற்றினார். பிரிஜித் மக்ரோனோடு சீனாவின் வெளிநாடுகளுக்கான துணை அமைச்சர் Zhan Yesui உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். பிரிஜித் மக்ரோன் தெரிவிக்கும் போது, ‘சீன பண்டா குட்டி ஒன்றை ஈன்றெடுப்பது பிரான்சுக்கு முதன் முறை. தவிர பிரான்ஸ் நான்காவது ஐரோப்பிய நாடாகும். இந்த நிகழ்வு சந்தோசமான எளிமையான வாழ்வை பிரதிபலிப்பதாகும்!’ என பிரிஜித் தெரிவித்தார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் Yuan Meng பண்டாவின் தாய் மற்றும் தந்தை பண்டாவினை Beauval மிருகக்காட்சி சாலை வாடகைக்கு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.