நடிகை சோனாக்ஷி சின்ஹா, பாலிவுட் படங்கள் பலவற்றில் நடித்தவர். அவர் கைது செய்து அழைத்து செல்லப்படுவது போல, ஒரு வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
நடிகர் ரஜினியுடன் லிங்கா படத்தில் நடித்து தமிழிலும் பிரபலமான சோனாக்ஷி சின்ஹாவை ஏன் இப்படி கைது செய்து அழைத்துச் செல்கின்றனர் என புரியாமல், அவரது ரசிகர்கள் பலரும் திகைத்துப் போய் இருக்கின்றனர்.
ஆனால், அவரது அடுத்தப் படத்துக்கான புரமோஷன் வீடியோ அது. அதை விவரங்கள் எதுவும் குறிப்பிடாமல், சமூக வலைதளங்களில் வெளியிட்டு, ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அதன் பின், அதற்கான விளக்கத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்து இப்படி செய்திருப்பதாக பாலிவுட் வட்டாரங்களில் தகவல் கூறுகின்றனர்.
படத்துக்கான புரமோஷன் வீடியோ என புரியாமல், சோனாக்ஷியின் ரசிகர்கள் சிலர் கொந்தளிக்கின்றனர்.