Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

படைவீரரின் இத­யத்­தி­லி­ருந்து, 20 வரு­டங்­களின் பின் அகற்­றப்­பட்ட ரவை

January 8, 2018
in News
0

துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­காகி காய­ம­டைந்த இலங்கை இரா­ணு­வத்தின் முன்னாள் வீர­ரான விஜே­சுந்­தர பண்­டா­ரவின் இத­யத்தில் சிக்­குண்­டி­ருந்த துப்­பாக்கி ரவை ஒன்று, சுமார் 20 வரு­டங்­களின் பின்னர் சத்­திர சிகிச்­சையின் மூலம் அகற்­றப்­பட்ட சம்­பவம் காலி­யி­லுள்ள வைத்­தி­ய­சாலை ஒன்றில் இடம்­பெற்­றுள்­ளது.

காலி­யி­லுள்ள கூட்­டு­றவு வைத்­தி­ய­சா­லையின் இத­யநோய் நிபுணர் நாமல் கமகே உள்­ளிட்ட வைத்­தியர் குழா­மினால் இந்த சத்­திர சிகிச்சை வெற்­றி­க­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. ரவை அகற்­றப்­பட்­டதன் பின்னர் விஜே­சுந்­தர தற்­போது சிறந்த தேகா­ரோக்­கி­யத்­துடன் காணப்­ப­டு­கின்றார்.

இந்­நி­லையில், சத்­தி­ர­சி­கிச்­சைக்கு உள்­ளான விஜே­சுந்­தர ஊடகம் ஒன்­றுக்கு தனது அனு­ப­வங்­களை பகிர்ந்து கொண்டார். இது தொடர்பில் அவர் தெரி­விக்­கையில்,இந்த விடயம் எனக்கு புது­மை­யாக உள்­ளது. எனது உடலில் ரவை ஒன்று உள்­ளது என்­பது எனக்குத் தெரியும்.

ஆனால், அது இயத்­தி­னுள்தான் காணப்­பட்­ட­தென்­பதை நான் அறிந்­தி­ருக்­க­வில்லை. இதனை உடலில் வைத்­துக்­கொண்டே கடந்த காலங்­களில் கடி­ன­மான பல வேலை­களை செய்­துள்ளேன். வயல் வேலைகள், வீட்டு வேலைகள் உள்­ளிட்­ட­வை­களை செய்தேன்.
இரா­ணு­வத்தில் 1987 ஆம் ஆண்டு இணைந்தேன். எனது தொழிலை முத­லா­வது வடக்­கி­லி­ருந்து ஆரம்­பித்தேன். அதன்­பின்னர் தொழிலின் நிமித்தம் 1997 ஆம் ஆண்டில் வவு­னியா, மாங்­குளம் பிர­தே­சத்­துக்கு சென்றேன்.

அன்று மாங்­குளம் இரா­ணுவ முகாமை அண்­டிய காட்­டுப்­ப­கு­தியில் விடு­தலைப் புலி­க­ளுக்கும் எமக்­கு­மி­டையே பாரிய யுத்தம் நடை­பெற்­றது. அதில் வெற்­றி­கொண்டு அவர்­களின் ஆயு­தங்­களை கைப்­பற்­றிக்­கொண்டு திரும்­பும்­போது, மறைந்­தி­ருந்த விடு­தலை புலிகள் உறுப்­பினர் ஒருவர் எம்­மீது தாக்­குதல் நடத்­தினார். அதன் போதே நான் இவ்­வாறு துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­கானேன்.
அதன்­பின்னர், சக நண்­பர்­களால் நான் வவு­னியா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்னர் அங்­கி­ருந்து அநு­ரா­த­புரம் வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டேன். அங்கு எனக்கு சிகிச்­சை­ய­ளித்த வைத்­தி­யர்கள் குறித்த ரவையை அகற்ற தேவை­யில்லை. அதனால் உயி­ருக்கு எவ்­வித ஆபத்தும் இல்லை என்­றனர்.

அத­னை­ய­டுத்து. வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து வெளி­யே­றிய சில காலத்­தி­லேயே இரா­ணு­வத்தில் இணைந்து மீண்டும் பணி­யாற்­றினேன். இந்த ரவை­யினால் உயி­ருக்கு எவ்­வித பாதிப்­பு­களும் இல்லை என்று வைத்­தி­யர்கள் கூறி­யதால் அது­பற்றி நானும் பெரி­தாக கருத்­திற்­கொள்­ள­வில்லை.

இச்­சம்­ப­வத்தின் பின்­னரும் ஒரு­த­டவை மோட்­டார்­குண்டுத் தாக்­கு­த­லுக்கு இலக்­காகிச் சிகிச்சை பெற்று மீண்டும் பணியில் இணைந்து கடந்த 2009 ஆம் ஆண்டு கட­மை­யி­லி­ருந்து ஓய்வு பெற்றேன்.
அதன்­பின்னர் ஓய்­வூ­தி­யத்தில் எமது ஊரான பிபி­லையில் வயல் காணி ஒன்றை வாங்கி அதில் விவ­சாயம் செய்­து­வந்தேன் இவ்­வாறு இருக்­கையில் அண்­மையில் மார்ப்புப் பகு­தியில் கடும் வலி ஏற்­பட்­ட­தை­ய­டுத்து, ஆசி­ரி­யை­யான எனது மனைவி என்னை மொன­ரா­கலை வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் சென்றார் என்றார்.

அதன்­பின்னர் பற்­பல சிகிச்சை நிலை­யங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட பரி­சோ­த­னை­களின் மூலம் குறித்த ரவை இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்டு, உட­ன­டி­யாக சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்ள பரிந்­து­ரைக்­கப்­பட்டேன் எனக் கூறினார்.

அதற்­க­மைய. பல­ரது வேண்­டு­கோ­ளுக்கு இணங்க விஜே­சுந்­தர, காலி கராப்­பிட்­டி­யி­லுள்ள பிர­பல இதய சத்­தி­ர­சி­கிச்சை நிபு­ண­ரிடம் அழைத்துச் செல்­லப்­பட்டு சத்­தி­ர­சி­கிச்­சைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு ரவை அகற்­றப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் வைத்­தி­யர்கள் தெரி­விக்­கையில், இடக்கை வழி­யாக உட­லினுள் நுழைந்த ரவையே இத­யத்தை அடைந்­துள்­ளது. அதனை நாம் பரி­சோ­த­னை­யூ­டாக அறிந்து கொண்டோம். அதன்­பின்னர் சுமார் 45 நிமிட சத்­தி­ர­சி­கிச்­சையின் பின்னர் ரவை அகற்­றப்­பட்­டது.

இடக்­கையில் தோட்­பட்டை பகு­தியில் இந்த ரவை உள்நுழைந்து இதயத்திலிருந்து கையுடன் தொடர்புபடும் நாளத்தின் வழியாக இதயத்துக்கு பயணித்து இதயசுவற்றை துளைத்துக்கொண்டு, வலது இதயவறைக்கு பயணித்து அங்குள்ள நார் இழையங்களில் சிக்குண்டுள்ளது.

இதே­வேளை, இந்த ரவை­யினால் விஜே­சுந்­த­ர­வுக்கு மார்ப்பு வலி ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை என்றும், இரத்­த­நா­ள­மொன்றில் ஏற்­பட்­டி­ருந்த அடைப்­பொன்றின் கார­ண­மா­கவே அவ­ருக்கு வலி ஏற்­பட்­ட­தா­கவும் வைத்­தி­யர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Previous Post

லடாய்க்கு ஒரு உதாரணம்

Next Post

அமெரிக்க, இந்திய, பிரித்தானிய உதவியுடன் மத்திய வங்கிக்கு பாதுகாப்பு

Next Post

அமெரிக்க, இந்திய, பிரித்தானிய உதவியுடன் மத்திய வங்கிக்கு பாதுகாப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

June 1, 2026
19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்தது

June 1, 2026
ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026

Recent News

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

June 1, 2026
19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்தது

June 1, 2026
ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures