Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு – பிரதி அமைச்சரின் அறிவிப்பு

October 8, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள சுற்றுலாவுக்கு பொருத்தமான காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று (07.10.2025) உரையாற்றிய போதே சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க (Ruwan Ranatunga) இதனைத் தெரிவித்துள்ளார்.  

திருகோணமலை பகுதியிலுள்ள மார்பள் பீச் மற்றும் ஸ்வீட் பே ஆகிய பகுதிகளை மையப்படுத்திய அரசாங்கத்தின் சுற்றுலா திட்டங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், யுத்த காலத்தில் பல காணிகளில் முப்படை வசமிருந்த நிலையில் அவை படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.

படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு - பிரதி அமைச்சரின் அறிவிப்பு | Land Issues In The Northern Province In Sri Lanka

இந்நிலையில், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை சுவீகரித்துள்ள ஸ்வீட் பே காணி தொடர்பில் வழக்கு உள்ளது.

அது தீர்க்கப்பட்டவுடன் விருப்ப கோரல்கள் அழைக்கப்பட்டு, காணிகள் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும்.

முப்படையினர் வசம் பல காணிகள் உள்ளன. அவற்றில் விசேடமாக சுற்றுலா திட்டங்களுக்கு வழங்கப்படக்கூடிய காணிகளை உரிய அமைச்சுடன் கலந்துரையாடி விடுவிப்பதற்கும், அவற்றை பொருத்தமான முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்குமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Previous Post

கரூர் மக்களுக்கு விஜய்யிடமிருந்து பறந்த முக்கிய அறிவிப்பு

Next Post

சரத் பொன்சேகாவை பயன்படுத்தி புலிகளை நசுக்க காய் நகர்த்திய சிறிலங்கா அரசு

Next Post
சரத் பொன்சேகாவை பயன்படுத்தி புலிகளை நசுக்க காய் நகர்த்திய சிறிலங்கா அரசு

சரத் பொன்சேகாவை பயன்படுத்தி புலிகளை நசுக்க காய் நகர்த்திய சிறிலங்கா அரசு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures