Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பங்களாதேஷை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொண்ட இந்தியா, மகளிர் அணி

March 22, 2022
in News, Sports
0
பங்களாதேஷை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொண்ட இந்தியா, மகளிர் அணி

பங்களாதேஷுக்கு எதிராக ஹெமில்டன், சிடொன் பார்க் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற போட்டியில் 110 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா, மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் அரை இறுதி வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொண்டுள்ளது.

Image

யஸ்திகா பாட்டியா குவித்த அரைச் சதம், ஸ்நேஹ் ரானா மற்றும் பூஜா வஸ்த்ராக்கர் ஆகியோரின் சகலதுறை ஆட்டங்கள் இந்தியாவின் வெற்றியை இலகுபடுத்தின.

இந்த வெற்றியுடன் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 3ஆவது வெற்றியை ஈட்டிய இந்தியா, அணிகள் நிலையில் 6 புள்ளிகளுடன் நிகர ஓட்ட வேக அடிப்படையில் 3ஆம் இடத்தில் இருக்கின்றது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா 50 ஒவர்களில் 7 விக்கெட்களை இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றது.

Image

ஸ்ம்ரித்தி மந்தானா (30 ஓட்டங்கள்), ஷபாலி வெர்மா (42) ஆகிய இருவரும் 15 ஓவர்களில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால் அதே மொத்த எண்ணிக்கையில் இவர்கள் இருவரும்  அணித் தலைவி  மிதாலி ராஜும்  (0) இழந்தபோது இந்தியா ஆட்டம் கண்டது.

தொடர்ந்து ஹார்மன்ப்ரீத் கோர் (14) நான்காவதாக ஆட்டமிழந்தபோது இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 104 ஓட்டங்களாக இருந்தது.

Image

எனினும் யஸ்திகா பாட்டியா (50), ரிச்சா கோஷ் (26) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தனர்.

தொடர்ந்து பூஜா வஸ்த்ராக்கர் (30 ஆ.இ.),  ஸ்நேஹ்   ரானா (27) ஆகிய இருவரும் திறமையாக துடுப்பெடுத்தாடிய இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 200 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் ரிட்டு மோனி 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நஹிதா அக்தர் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

230 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 40.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

பங்களாதேஷின் 5ஆவது விக்கெட் 18ஆவது ஓவரில் வீழ்ந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 35 ஓட்டங்களாக இருந்தது.

இந் நிலையில் ஜோடி சேர்ந்த லதா மொண்டால் (24), சல்மா காட்டுன் (32) ஆகிய இருவரும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி பங்களாதேஷுக்கு   உற்சாகம் கொடுத்தனர். ஆனால் அவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சல்மா காட்டுன் ஆட்டமிழக்க, பங்களாதேஷின் எதிர்பார்ப்பு தகர்ந்தது.

Image

இவர்கள் இருவரை விட முர்ஷிதா காட்டுன் (19), ரிட்டு மொனி (16), ஜஹனாரா அலாம் (11 ஆ.இ) ஆகிய மூவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

இந்திய பந்துவீச்சில் ஸ்நேஹ் ரானா 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஜூலான் கோஸ்வாமி 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பூஜா வஸ்தராக்கர் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இந்தியா தனது கடைசி போட்டியில் தென் ஆபிரிக்காவை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்த்தாடவுள்ளது. அப் போட்டியே மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கடைசி லீக் ஆட்டமாக அமைகின்றது.

Previous Post

பேஸ்புக், இன்ஸ்டாகிராமிற்கு தடை விதித்தது ரஷ்ய நீதிமன்றம்

Next Post

குடலிறக்கப் பாதிப்பு (ஹெர்னியா) பாதிப்பிற்குரிய சிறந்த சிகிச்சை எது?

Next Post
குடலிறக்கப் பாதிப்பு (ஹெர்னியா)  பாதிப்பிற்குரிய சிறந்த சிகிச்சை எது?

குடலிறக்கப் பாதிப்பு (ஹெர்னியா) பாதிப்பிற்குரிய சிறந்த சிகிச்சை எது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures