சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஈஸியா, ஜாலியா அல்வாபோல ஒரு மேட்ச் இன்று. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் விளையாடுகிறது சென்னை. இதுவரை 10 மேட்ச் விளையாடி, அதில் 7 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது சென்னை. 10 போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றிபெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது ராஜஸ்தான். ஆனால், ப்ளே ஆஃப் வாய்ப்பு ராயல்ஸுக்கு இன்னும் இருக்கிறது. அதனால், இது சென்னையைவிடவும் ராஜஸ்தானுக்குத்தான் மிக முக்கியமான போட்டி. அதேசமயம் சன் ரைஸர்ஸ் தொடர்ந்து வெற்றிபெறுவதால், எப்படியும் இரண்டாவது இடத்தில் லீக் மேட்ச்களை முடித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது சென்னை. #RRvCSK
ஜெய்ப்பூர் பிட்ச்!
பேட்டிங், பெளலிங் என இரண்டுக்குமே சாதகமான ஆடுகளம் ஜெய்ப்பூர் பிட்ச். இந்த சீஸனில் இந்த ஸ்டேடியத்தில் அதிகபட்ச ஸ்கோர் என்பது, மும்பை இந்தியன்ஸின் 167 ரன்னை சேஸ் செய்து ராஜஸ்தான் பெற்ற 168 ரன்தான். இங்கு இதுவரை ஐந்து போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் மூன்று போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றிபெற்றுள்ளன. ஸ்பின்னர்களைவிட இந்த பிட்ச்சில் வேகப்பந்து வீச்சாளர்களே சிறப்பாகப் பந்துவீசி, ரன்னைக் கட்டுப்படுத்தியிருக்கிறார்கள்.