Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நிதி குறைக்­கப்­பட்­டுள்­ள­தால் அபிவிருத்திக்கு பெரும் பாதிப்பு

October 8, 2018
in News, Politics, World
0

மீள்­கு­டி­யேற்ற அமைச்­சுக்கு அடுத்த ஆண்டு பாதீட்­டில் 6ஆயி­ரத்து 500 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கப்­ப­டும் என்று வாக்­கு­றுதி வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

இருப்­பி­னும், அந்த நிதி பெரு­ம­ள­வில் வெட்­டிக் குறைக்­கப்­பட்டு ஆயி­ரத்து 750 மில்­லி­யன் ரூபாவே ஒதுக்­கப்­ப­டக் கூடும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வட­கி­ழக்­கில் மீள்­கு­டி­யேற்­றப் பிர­தே­சங்­க­ளில் பெரு­ ம­ளவு அபி­வி­ருத்தி வேலை­கள் முன்­னெ­டுப்­ப­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்ள நிலை­யில், அமைச்­சுக்­கான நிதி குறைக்­கப்­பட்­டுள்­ள­தால் பெரும் பாதிப்பு ஏற்­ப­டக் கூடும் என்று அதி­கா­ரி­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

மீள்­கு­டி­யேற்ற அமைச்­சுக்கு 2018ஆம் ஆண்­டுக்­கான பாதீட்­டில் 900 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. கடந்த காலங்­க­ளில் அந்த அமைச்­சுக்கு அதி­க­ள­வான நிதி ஒதுக்­கப்­பட்­டி­ருந்­த­போ­தும், நடப்பு ஆண்­டுக்கு குறை­வான நிதியே வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

இத­னைச் சுட்­டிக்­காட்­டி­யும், வட­கி­ழக்­கில் மக்­கள் மீளக்­கு­டி­ய­மர்ந்த பிர­தே­சங்­க­ளில் அடிப்­ப­டைத் தேவை­களை முழு­மைப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­க­ளுக்­குப் பெரும் தொகை நிதி தேவை என்­பதை வலி­யு­றுத்­தி­யும் மீள்­கு­டி­யேற்ற அமைச்சு அடுத்த ஆண்­டுக்கு 20 ஆயி­ரம் மில்­லி­யன் ரூபா தேவை என்று நிதி அமைச்­சுக்கு கோரிக்கை சமர்­பித்­தி­ருந்­தது.

நிதி அமைச்சு 6 ஆயி­ரத்து 500 மில்­லி­யன் ரூபாவே வழங்க முடி­யும் என்று அறி­வித்­தி­ருந்­தது.

நாடா­ளு­மன்ற நிதிக் குழுக் கூட்­டம் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் கடந்த மாத ஆரம்­பத்­தில் நடை­பெற்­றது. மீள்­கு­டி­யேற்ற அமைச்­சுக்கு அதி­க­ரித்த நிதி ஒதுக்­கீடு வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்று கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. 6ஆயி­ரத்து 500 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கப்­ப­டும் என்று இந்­தக் கூட்­டத்­தி­லும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

சில நாள்­க­ளுக்கு முன்­னர் நிதி அமைச்­சில் நடந்த கலந்­து­ரை­யா­ட­லில், மீள்­கு­டி­யேற்ற அமைச்­சுக்கு அடுத்த ஆண்டு பாதீட்­டில் ஆயி­ரத்து 750 மில்­லி­யன் ரூபாவே ஒதுக்­கப்­ப­டும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Previous Post

உறுதிப்படுத்தாத செய்தியை அனுப்பிய முதலமைச்சர்

Next Post

இலங்கையருக்கு ஆபத்தானதாக அமையும் அடுத்தவருடம்

Next Post

இலங்கையருக்கு ஆபத்தானதாக அமையும் அடுத்தவருடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures