Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உறுதிப்படுத்தாத செய்தியை அனுப்பிய முதலமைச்சர்

October 8, 2018
in News, Politics, World
0

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ் வ­ரன், தனக்குக் கிடைத்த செய்­தியை உறு­திப்­ப­டுத்­தா­மல், அதன் உண்­மைத் தன்­மையை ஆரா­யா­மல், எதிர்க்­கட்­சித் தலை­வர் மற்­றும் அமைச்­சர்­க­ளுக்கு அனுப்­பி­யுள்­ளார்.

இத­னால் எதிர்க்­கட்­சித் தலை­வர் தவ­ரா­சா­வி­டம் அவர் முறை­யாக வாங்­கிக் கட்­டி­யுள்­ளார்.

இணை­யத்­த­ளத்­தில், வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் மகன் தொடர்­பான செய்தி வெளி­யா­கி­யி­ருந்­தது. அந்­தச் செய்­தியை வடக்கு மாகாண முத­ல­மைச்­சர், வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வ­ருக்­கும், அமைச்­சர்­க­ளுக்­கும், அவைத் தலை­வ­ருக்­கும் அனுப்பி வைத்­துள்­ளார்.

இது தொடர்­பில் வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா, வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்கு மின்­னஞ்­சல் அனுப்­பி­யுள்­ளார்.
அதில் தெரி­வித்­துள்­ள­தா­வது:

யாழ்ப்­பா­ணம் வர்த்­தக நிலை­யத்­தில் திருட்டு, வடக்கு மாகாண சபை முக்­கிய பிர­மு­க­ரின் மக­னும் சிக்­கி­னார் என்ற தலைப்­பில் இணை­யத்­த­ளத்­தில் வெளி­யான செய்­தியை எனக்­கும் வடக்கு மாகாண அமைச்­சர்­கள், அவைத் தலை­வ­ருக்­கும் மின்­னஞ்­ச­லில் அனுப்­பி­ய­தற்கு எனது நன்­றி­கள்.

வடக்கு மாகாண சபை­யின் நிறை­வேற்­றுச் செயற்­பா­டு­க­ளில்­தான் தாங்­கள் திறம்­பட, ஆக்­க­பூர்­வ­மாக விட­யங்­களை விளங்­கிச் செயற்­படாத் தன்மை இருக்­கின்­றது என்று நான் இது­வரை தங்­க­ளைப் புரிந்து கொண்­டேன்.

ஆனால் அந்த விட­யப் பரப்­புக்­க­ளுக்கு அப்­பா­லும் அதே வடி­வில் தான் செயற்­ப­டு­கி­றீர்­கள் என்­பதை மேற்­ப­டிச் செய்­தியை அனுப்­பி­ய­தன் மூலம் உணர்­கின்­றேன்.

தங்­கள் ஊது­கு­ழல் இணை­யத்­த­ளத்­தில் ஒரு செய்­தியை வர­வைத்து அதைப் பரப்பி அர­சி­யல் லாபம் தேடும் தங்­கள் நோக்­கத்­தை­யிட்டு நான் பரி­தாப்­ப­டு­கின்­றேன். எனது மக­னுக்கு 26 வயது. அவர் அர­சி­யல் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டு­ப­வரோ அல்­லது மாகாண சபை­யில் நான் அங்­கம் வகிப்­ப­தன் மூலம் ஏதா­வது நன்மை பெற்­ற­வரோ அல்­லர்.

அவ­ரது நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் எனக்­கும் எந்­தச் சம்­பந்­த­மும் இல்லை. அவர் தனித்­து­வ­மா­ன­வர் என்று கூறி நான் தப்ப எண்­ணு­கின்­றேன் என்று கருதவேண்­டாம்.

ஒரு­வ­ரின் தனிப்­பட்ட விட­யங்­க­ளையோ அல்­லது அவ­ரின் குடும்ப அங்­கத்­த­வர்­க­ளின் விட­யங்­க­ளையோ அர­சி­யல் ஆதா­யத்­துக்­கா­கப் பயன்­ப­டுத்­து­வது அர­சி­யல் நாக­ரி­கம் அல்ல.

அதன் அடிப்­ப­டை­யில்­தான் உங்­கள் குடும்ப விட­யங்­கள் பல­வற்­றை­யும், தங்­க­ளது வீட்­டில் தற்­போது நடக்­கும் விட­யங்­க­ளைப் பலர் எமக்கு எடுத்­துக் கூறி­ய­தோடு, சபை­யில் பேசு­மா­றும் வேண்­டி­ய­போது நான் அவ்­வா­றான அநா­க­ரிக அர­சி­ய­லைச் செய்ய விரும்­பா­மை­யால் அவை பற்­றிப் பேசு­வ­தில்லை. இனி­மே­லும் பேச போவ­து­மில்லை.

தங்­கள் ஊது­கு­ழல் இணை­யத்­தில் வெளி­யான விட­யத்­துக்கு வரு­கின்­றேன். அதில் கூறப்­பட்­டுள்ள விட­யங்­களைப் பிழை­யென என்­னால் நிரூ­பிக்க முடி­யும். தனிப்­பட்ட முறை­யில் நிரூ­பிக்­கா­மல் பகி­ரங்­க­மா­கவே நிரூ­பிக்­கத் தயா­ராக உள்­ளேன்.

ஏற்­க­னவே மாகாண சபை­யின் கடந்த 5 ஆண்டு செயற்­பாட்­டில் நடை­பெற்ற ஊழல்­கள், செயற்­பாட்­டுத் திறன்­னின்மை, அதி­கார முறை­கேடு, அசட்­டை­யீ­ன­மான நிறை­வேற்­றுச் செயற்­பா­டு­கள் போன்­ற­வற்றைப் பகி­ரங்­க­மாக விவா­திப்­ப­தற்­கு­ தங்­களை வரு­மாறு பல தட­வை­கள் நான் அழைத்­தி­ருந்­தேன்.

தாங்­கள் வெளிப்­ப­டைத் தன்­மை­யைப் பேணு­வ­தாகக் கூறு­வது உண்­மை­யா­னால், அதே­போல் தங்­கள் கூற்­றுக்­கள் உண்­மை­யா­ன­தும் நேர்­மை­யா­ன­து­மா­னால், இந்த விட­யம் உள்­ள­டங்­க­ளாக வடக்கு மாகாண சபை­யின் செயற்­பாடு தொடர்­பில் ஒரு பகி­ரங்க விவா­தத்­துக்கு வரவேண்­டும் என்று மீண்­டும் சவால் விடு­கின்­றேன்.

அதே­நே­ரம் தாங்­கள் அனுப்­பிய செய்­தி­யைத் திசை திருப்­பு­வ­தாகக் கரு­தி­னால், அந்த விட­யத்தை முத­லில் விவா­தித்து அதன் பின்­னர் ஏனைய விட­யத்­துக்­குள் செல்­ல­வும் நான் முழு­மை­யான சம்­ம­தத்­தைத் தெரி­விக்­கின்­றேன். தங்­க­ளி­ட­மி­ருந்து இதற்கு உறு­தி­யான பதிலை எதிர்­பார்க்­கின்­றேன் – என்­றுள்­ளது.

Previous Post

இதய சத்திரசிகிச்சையில் வெற்றிகண்ட யாழ் மருத்துவருக்கு பாராட்டு

Next Post

நிதி குறைக்­கப்­பட்­டுள்­ள­தால் அபிவிருத்திக்கு பெரும் பாதிப்பு

Next Post

நிதி குறைக்­கப்­பட்­டுள்­ள­தால் அபிவிருத்திக்கு பெரும் பாதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures