நண்பியைப் பாதுகாக்க காற்றடைத்த மெத்தையில் மிதந்து கனடா வந்தடைந்த அமெரிக்கர்

நண்பியைப் பாதுகாக்க காற்றடைத்த மெத்தையில் மிதந்து கனடா வந்தடைந்த அமெரிக்கர்

தனது பெண் நண்பியைப் பாதுகாக்கும் பொருட்டு அமெரிக்க இளைஞர் ஒருவர் காற்றடைத்த மெத்தையொன்றில் அமெரிக்காவின் Maineமாநிலத்தில் உள்ள St. Croix ஆற்றைக் கடந்து, கனடாவின் New Brunswick மாகாணத்தை வந்தடைந்துள்ளார்.

25 வயதாகும் John Bennett, அமெரிக்காவின் Maine மாநிலத்தில் உள்ள Calais பகுதியில் அமெரிக்க- கனேடிய எல்லையைக் கடக்க முயற்சித்ததாகவும், அமெரிக்காவில் அவர் குறும்புச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுப்பதால் சுங்க அதிகாரிகள் அவருக்கு அனுமதி மறுத்ததாகவும் அவரது வழக்கறிஞர் Peter Thorn தெரிவித்தார்.

Bennett இற்கு 2 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Walmart அங்காடியில் காற்றடைக்கும் மெத்தை ஒன்றை வாங்கி, அதைக் காற்றினால் நிரப்பி, ஒரு மரத்துண்டை துடுப்பாகப் பயன்படுத்தி, Bennett, New Brunswick மாகாணத்தின் St. Stephen பகுதியில் உள்ள Ledge Road ஐ அண்டைய பகுதியில் கரையேறியதாக அவரது வழக்கறிஞர் New Brunswick மாகாணத்தில் Saint John நகரில் உள்ள மாகாண நீதிமன்றில் தெரிவித்தார்.

Bennett ஐக் கண்ட உள்ளூர் வாசி ஒருவர் காவல் துறையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமைக்காக அவர் கைது செய்யப்பட்டார்.

கருவுற்றிருக்கும் தனது பெண் நண்பியின் பாதுகாப்பை இட்டு தான் கவலை அடைந்திருந்ததாகவும், அதன் காரணமாகவே தான் கனடாவிற்கு வந்ததாகவும் Bennett நீதிமன்றில் குறிப்பிடடார்.young man on an air mattress,
<a href=air-mattress 2

air-mattress

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News