நடிகர் விஷ்ணு விஷால் தற்போது ஜெர்ஸி பட தமிழ் ரீமேக் மற்றும் எஃப்.ஐ.ஆர் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்லா. இவர் விஷ்ணு விஷாலின் நெருங்கிய நண்பர். இந்நிலையில் செல்லா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக ப்ரியா பவானி ஷங்கர் இணைந்துள்ளார்.