மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘#L 367 ‘ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருப்பதாக படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கத்தில் உருவாகும் ‘L 367 ‘ எனும் திரைப்படத்தில் மோகன்லால் கதையை வழிநடத்திச் செல்லும் முதன்மையான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் பைஜு கோபாலன் மற்றும் வி. சி. பிரவீன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும், ஹொலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களும் இணைய உள்ளதாகவும் இவர்களைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

