‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த நடிகர் டி எஸ் கே கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘டியர் ஜீவா’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
பிரகாஷ் வி. பாஸ்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டியர் ஜீவா’ எனும் திரைப்படத்தில் டி எஸ் கே, தீப்ஷிகா, மனிஷா ,கே பி வை யோகி, லொள்ளு சபா உதயா, பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அரவிந்த் செல்வராஜ் மற்றும் சஞ்சீவ் கண்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரஷாந்த் அர்வின் இசையமைத்திருக்கிறார். காதலர்களின் ஆதிக்க உணர்வை விவரிக்கும் இந்த திரைப்படத்தை செல் வைட்லி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சகாயா சதீஷ் மற்றும் உமர் முக்தார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இதன் முன்னோட்டத்தை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் தாழ்வு மனப்பான்மையுள்ள நாயகனுக்கு அழகான காதலி கிடைப்பதும் காதலையும், காதலியையும் தக்க வைத்துக் கொள்வதற்காக அவள் மீது ஆதிக்கம் செலுத்தும் மனநிலையை வெளிப்படுத்தும் காட்சிகள் இடம்பிடித்திருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.