கொழும்புக்கு வெளியேயும் தொடருந்து பயணச்சீட்டு கட்டணத்தை மீளப் பெறும் வசதிகள் விரிவுபடுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
பிமல் ரத்நாயக்க தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்த வியடத்தினை அறிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 25ஆம் திகதி முதல் இந்த புதிய வசதிகள் நடைமுறைக்கு வரவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடருந்து பயணச்சீட்டுகளுக்கான கட்டணம்
இதுவரையில் தொடருந்து பயணச்சீட்டுகளுக்கான கட்டணத்தை மீளப் பெறும் வசதி கொழும்பு கோட்டை மற்றும் மருதானை தொடருந்து நிலையங்களில் மட்டுமே செயற்பாட்டில் இருந்து வருகிறது.
இந்தநிலையில்,டிசம்பர் 25 முதல் பதுளை, எல்ல, பண்டாரவளை, ஹப்புத்தளை, நானுஓயா மற்றும் ஹட்டன் ஆகிய இடங்களில் குறித்த வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும் சோதனை அடிப்படையில் பணத்தைத் மீளப் பெறும் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்.
மேலும் ஜனவரி முதல் கண்டி தொடருந்து நிலையத்திலும் குறித்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளா

