கார், லாரி, ஆட்டோ, வேன், டூவீலர் போன்ற வாகனங்களை கடனில் வாங்கி அதை திருப்பி செலுத்தவில்லை என்றால் அவற்றை ஜப்தி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக பயந்து வாகனங்களை மறைத்து வைக்கும் செயல்களிலும் அதன் உரிமையாளர்கள் ஈடுபடுவார்கள் என்று கேள்விபட்டிருக்கோம்.ஆனால் இத்தகைய கடன் மூலம் வாங்கப்பட்ட ஒரு விமானம் திடீரென மாயமாகியுள்ளது. அதை கண்டுபிடிக்க கடன் கொடுத்த நிறுவனம் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது. தென் ஆப்ரிக்காவில் குப்தா குடும்பம் என்றால் மிகவும் பிரபலம். இவரது உதவியால் ஒரு ஊழல் சமீபத்தில வெளிவந்து அதிபர் ஜேக்கப் ஜூம்மா பதவி விலகினார்.
இந்நிலையில் அவர் கனடா அரசு நிறுவனமான, கனடா ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம் மூலம் 41 மில்லியன் டாலர் கடன் மூலம் தொழில் ரீதியிலான பயன்பாட்டிற்கு ஒரு ஜெட் விமானத்தை (ஏசட்எஸ்ஓ-ஏகே) குப்தா குடும்பத்தினர் வாங்கினர். தற்போது இதன் தவணையை கடந்த அக்டோபர் முதல் செலுத்தவில்லை.27 மில்லியன் டாலர் நிலுவை உள்ளது. 3 சகோதரர்களை கொண்ட அந்த குடும்பத்தில் அஜய் குப்தா என்பவருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது சட்டத்தின் முன்பு அந்த விமானத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்த விமானம் மாயமாகியிருப்பதால் கனடா நிறுவனம் மிகுந்தை கவலை அடைந்துள்ளது.
அந்த விமானத்தை நேரில் பார்க்க முடியாமல் கனடா நிறுவனம் தவித்து வருகிறது. அது எங்கிருக்கிறது என்பதும் கண்டறிய முடியவில்லை. வானத்தில் இருந்து விமானத்தை தரையிறக்க அனுமதிக்கும் படி கனடா நிறுவனம் தென் ஆப்ரிக்கா நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
அதோடு ஒரு இணைய தளத்தில் ஒரு விளம்பரத்தையும் வெளியிட்டுள்ளது. அதில், உலகளவில் இந்த விமானம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து தருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இ ந்த அறிவிப்பை அதன் உரிமையாளரோ? அல்லது அதை இயக்குபவரோ? வெளியிடவில்லை என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விமானம் சமீபத்தில் இந்தியா, ரஷ்யா, துபாய் விமான நிலையங்களில் இருந்தது தெரியவந்துள்ளது.