Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தீராத வேதனையை தந்துவிட்டார் மைத்திரி!

November 11, 2019
in News, Politics, World
0

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது குடும்பத்திற்கு மீண்டும் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளார் என ரோயல் பார்க்கில் கொலை செய்யப்பட்ட யுவதி யுவோன் ஜோன்சனின் சகோதரி தெரிவித்துள்ளார்

தனது முகநூல் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ள அவர், தனது சகோதரியின் கொலையாளி விடயத்தில் இலங்கை ஜனாதிபதிக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்

இலங்கை ஜனாதிபதி நாட்டின் நீதித்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரோயல் பார்க்கில் தனது சகோதரியை கொலை செய்த யூட் அன்டனி ஜயமகவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளமை குறித்து தனது முகநூல் பதிவில் கரொலின் ஜொன்சன் பிரட்லி மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களே நான் இதனை உங்களிற்கு எழுதுகின்றேன். நீங்கள் இதனை படிக்கமாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும்.

எனது சகோதரியின் கொலைகாரனிற்கு சனிக்கிழமை இரவு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளீர்கள். இலங்கையின் நீண்ட வார இறுதியில் இந்த பொதுமன்னிப்பை வழங்கியதன் மூலம், நீங்கள் செய்த செயற்பாட்டிற்கான விமர்சனங்களை நீங்கள் தவிர்த்துக்கொள்ளலாம்.

மிகவும் ஆபத்தான இந்த நபரை விடுதலைசெய்யும் முடிவை எப்படி இரு புதல்விகளின் தந்தையான நீங்கள் எடுத்தீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை.

அந்த இரவு எனது சகோதரி சந்தித்த ஒவ்வொரு காயம் குறித்தும் எனக்கு தெரியும். என்னால் அது குறித்த நீண்ட பட்டியலை வெளியிட முடியும். துயரம் தரும் வகையில் அது இன்னமும் எனது நினைவுகளில் உள்ளது.

ஆனால் எனது பெற்றோர் அந்த துயரத்தினை அனுபவிப்பதிலிருந்து அவர்களை பாதுகாக்கவேண்டியுள்ளது. அன்றைய இரவில் எனது சகோதரி அனுபவித்ததை என்னால் நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியாது.

அவர் தனது உயிரை காப்பாற்ற போராடினார், முழங்கால் முறிந்த நிலையிலும் தன்னை தாக்குபவனிடமிருந்து தப்புவதற்காக அவர் ஓடினார்.

கொலைகாரனை விடுதலை செய்வதில் நீங்கள் உரிய நடைமுறையை பின்பற்றவில்லை என்பது எங்களிற்கு தெரியும்.

ஆனால் இந்த சம்பவம் குறித்து வழக்கு குறித்து அறிந்துகொள்வதற்காக சிறிது நேரத்தையாவது நீங்கள் செலவிட்டீர்களா என்பது எனக்கு தெரியவில்லை.

கொலை ஒரு குடும்பத்தின் மீது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதையும், இழப்பை தொடர்ந்து இழப்பு ஏற்படுவதையும் எவராலும் புரிந்துகொள்ள முடியாது.

இதனை தாங்கிக்கொள்ள முடியாத நண்பர்களை நாங்கள் இழந்தோம், எங்கள் நாடு என நாங்கள் அழைத்த நாட்டை இழந்தோம் எங்களை பலமுறை இழந்தோம்.

நானும் எனது பெற்றோரும் இருள்படிந்த எண்ணங்களிற்குள் நாங்கள் சிக்காமலிருப்பதை தவிர்த்து வருகின்றோம்.

நாங்கள் நலமாகயிருக்கின்றோம் உறுதியாகயிருக்கின்றோம் என காண்பிக்க முனைவதால் பாதிப்புகள் ஏற்படலாம், எங்களிற்கு இது தெரியும். ஆனால் கொலைகாரன் எங்களிடமிருந்து மேலதிகமாக எதனையும் எடுத்துச்செல்வதை தவிர்ப்பதற்கு இதுவே வழியாகும்.

ஏனையவர்கள் முன்னிலையில் உறுதியானவராக தன்னை காண்பிக்கும் தந்தை மூடப்பட்ட கதவுகளின் முன்னாள் சிதறுண்ட மனிதரகா காணப்படுகின்றார்.

ஜனாதிபதியவர்களே எனது தந்தை உறக்கத்தில் அழுவதை நிறுத்துவதற்கு எத்தனை வருடங்கள் எடுத்தன என்பது உங்களிற்கு தெரியுமா?

எனது தாய் தனது பிள்ளைக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த முடியாதவராக காணப்படுகின்றார்.அவர் என்னை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கா கடுமையாக முயல்கின்றார். அது சரியான விடயமே.

நான் அதனை புரிந்துகொண்டுள்ளதால் எப்போதும் எனது தாயுடனேயே இருக்கின்றேன். தாயொருவரிற்கு சின்ன மகளாகயிருப்பதன் முக்கியத்துவத்தை நான் தற்போது புரிந்துகொள்கின்றேன்.

எனது சகோதரி இறந்தவேளை இதே உணர்வுகளால் நான் பாதிக்கப்பட்டது எனக்கு நினைவிற்கு வருகின்றது.

நீங்கள் பொதுமன்னிப்பு வழங்கவுள்ள செய்தியை கேள்விப்பட்ட பின்னர் நான் நிச்சயமற்ற நிலையில் உள்ளேன். எனது நடுக்கம் இன்னமும் நிற்கவில்லை.

எனது சகோதரியின் இழப்பிலிருந்து நான் மீள்வதற்கு பத்து வருடங்கள் எடுத்தது, ஆனால் தற்போது மீண்டும் அந்த இருண்ட குழியில் இருக்கின்றேன்.

இதனைவிட மோசமான விடயம் என்னவென்றால் எனக்கு தனது தாய் தேவையாக உள்ள நான்கு மாத மகள் இருக்கின்றாள், ஆகவே இது எனது உள்வலிமைக்கான பெரும் சவால் என்பதை நான் உணர்ந்துள்ளேன்.

நான் இந்த வலியுடன் வாழ பழகிக்கொண்டேன் இது எனது வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இவ்வாறான வலி ஒருபோதும் மறைவதில்லை, அது உங்களுடன் சேர்ந்த முதிர்ச்சியடைகின்றது.

நான் ஒரு பதின்ம வயது யுவதியாக இந்த வலியை எதிர்கொள்ள ஆரம்பித்தேன் தற்போது ஒரு தாய் என்ற நிலையில் அதனை அனுபவிக்கின்றேன், நான் மரணிக்கும்வரை நான் இந்தவேதனையை அனுபவிக்கவேண்டும் என்பது எனக்கு தெரியும்.

இறுதியாக ஜனாதிபதி அவர்களே நீங்கள் மீண்டும் தாங்க முடியாத வலியை எனது குடும்பத்திற்கு ஏற்படுத்தியுள்ளீர்கள்.

சமீபத்தைய சம்பவங்கள் குறித்து கரிசனை வெளியிட்ட நாங்களும் ஏனையவர்களும் இந்த வழக்கில் நீங்கள் ஏன் உங்களை ஈடுபடுத்திக்கொண்டீர்கள் என்ற உண்மையை அறிவதற்கு தகுதியுடையவர்கள் என கருதுகின்றோம்.

சிறிய குற்றங்களிற்காக தண்டனை அனுபவிக்கும் எண்ணற்ற இலங்கையர்கள் உள்ளனர்,எனினும் நீங்கள் திட்டமிட்டு கொலை செய்தமைக்காக தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளியொருவரிற்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளீர்கள்.

இதன் மூலம் இலங்கையின் நீதித்துறையின் உயர்பீடத்திற்கு நீங்கள் அவமரியாதை செய்துள்ளீகள்.

நீங்கள் உங்கள் உரையில் இந்த பொதுமன்னிப்பிற்காக வழங்கிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையாகயில்லை.

அந்த உரைக்கு பின்னர் நீங்கள் கடைப்பிடிக்கும் மௌனம் என்ன நடந்தது என்பதை நாங்கள் ஒருபோதும் அறியமாட்டோம் என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றது.

ஆனால் இனிமேல் நீங்கள் இந்த வழக்குடன் தொடர்புள்ளவராக என்றென்றும் கருதப்படுவீர்கள்- பிழையான காரணங்களிற்காக அவ்வாறு கருதப்படுவீர்கள்.

எனது தங்கைக்கு நடந்ததையும் அதன் பின்னர் எனது குடும்பம் அனுபவித்த துயரங்களையும் எந்த நடவடிக்கையாலும் மாற்றமுடியாது,

ஆனால் நீங்கள் உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி உங்கள் பதவிக்கால முடிவில் அதனை மோசமானதாக மாற்றியுள்ளீர்கள்

Previous Post

மனித முகம் கொண்ட அதிசய மீன்

Next Post

கோத்தபாய தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள தகவல்!

Next Post

கோத்தபாய தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

June 27, 2026
முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

June 27, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

12 மில்லியனுக்கும் அதிகமானோர் ‘ரின்’ இலக்கங்களை பெற்றுள்ளனர் ; 5 மில்லியன் பேர் காத்திருப்பதாக பிரதி அமைச்சர் நிஷாந்த தெரிவிப்பு

June 27, 2026
ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

June 27, 2026

Recent News

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

June 27, 2026
முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

June 27, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

12 மில்லியனுக்கும் அதிகமானோர் ‘ரின்’ இலக்கங்களை பெற்றுள்ளனர் ; 5 மில்லியன் பேர் காத்திருப்பதாக பிரதி அமைச்சர் நிஷாந்த தெரிவிப்பு

June 27, 2026
ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

June 27, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures