தினக்குரல் ,ஈழநாடு பத்திரிகைகளின் முன்னாள் விளையாட்டுத்துறை ஊடகவியலாளரும் புகைப்படப்பிடிப்பாளருமான அந்தோனிப்பிள்ளை தேவராஜா (85 வயது) புதன்கிழமை கனடாவில் காலமானார்.
சிறந்த உதைபந்தாட்ட வீரரும் நடுவருமான இவர் யாழ்.மாவட்ட அணியின் முன்னாள் உப தலைவர் என்பதுடன் யாழ்.மாவட்ட உதைபந்தாட்ட சபை மற்றும் யாழ்.மாவட்ட உதைபந்தாட்ட நடுவர்கள் சங்க முன்னாள் தலைவருமாவார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான,அன்னாரின் பூதவுடல் இன்று வெள்ளி மற்றும் நாளை சனிக்கிழமை கனடா Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue வில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு சனிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் Christ the King Catholic Cemetery 7770 Steeles Avenue EastMarkham, Ontario L6B 1A8 வில் நல்லடக்கம் இடம்பெறவுள்ளது.
