Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தினகரன் குதிரை பேரம்: 4 எம்.எல்.ஏ.,க்கள்,’சிறை’

January 8, 2018
in News, Politics, World
0

அ.தி.மு.க., அரசு மீது, தி.மு.க., நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால், அக்கட்சி வெற்றி பெற வசதியாக, நான்கு எம்.எல்.ஏ.,க்களிடம், தினகரன் குதிரை பேரம் நடத்தி உள்ளார். இதை முறியடிக்கும் வகையில், அந்த நான்கு எம்.எல்.ஏ.,க்களையும், ஆளுங்கட்சி தரப்பினர், தங்கள் கட்டுப்பாட்டில், சிறை வைத்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர், இன்று கவர்னர் உரையுடன் துவங்குகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தினகரன், இன்றைய கூட்டத்தில், முதல் முறையாக பங்கேற்கிறார்.
எதிர்பார்ப்பு

அவர் பங்கேற்கும் முதல் கூட்டம் என்பதால், அ.தி.மு.க., – தி.மு.க., – காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில், மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனில், தினகரனுக்கு, 24 எம்.எல்.ஏ.,க்கள் தேவை.

சமீபத்தில், தினகரன் அணியிலிருந்த, 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தி.மு.க., கொண்டு வர வேண்டும் என்றால், தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தினகரன் அணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 109 பேர் இருக்க வேண்டும்.சமீபத்தில், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், ‘சபாநாயகருடன் சேர்த்து, 112 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்’ என, அமைச்சர் ஜெயகுமார் உறுதிப்படுத்தினார்.

ஆனால், கூட்டத்தில், 104 பேர் மட்டுமே பங்கேற்றனர். மீதமுள்ள ஏழு பேரில், ‘இரு அமைச்சர்கள், அரசு விழாவில் பங்கேற்க சென்றுள்ளனர்; மூன்று பேர் சபரிமலை சென்றுள்ளனர்; இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்’ என, ஆளுங்கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டது.
ரகசிய பேச்சு

‘தங்களுக்கு, 112 பேர் ஆதரவு உள்ளதால், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால், வெற்றி பெறுவோம்’ என, ஆளுங்கட்சி தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையில், ஆளுங்கட்சியின், 112, எம்.எல்.ஏ.,க்களில், தங்களது அணிக்கு எட்டு பேரை இழுக்க, தினகரன் ரகசிய பேச்சு நடத்தியுள்ளார். அப்போது, கணிசமான பணம் பேரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில், நான்கு பேர் மட்டும், அணி மாற தயாராக இருப்பதாக, அவரிடம் உறுதி அளித்துள்ளனர்.இந்த தகவல் அறிந்ததும், ஆளுங்கட்சி மேலிடம் சுதாரித்தது. நான்கு பேரும் தினகரன் பக்கம் தாவாமல் இருக்க, அவர்களை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதனால், எம்.எல்.ஏ.,க்களை இழுக்கும் தினகரனின் முதற்கட்ட முயற்சியை, ஆளுங்கட்சி முறியடித்துள்ளது.
‘நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம்’ ”சட்டசபையில், வாய்ப்பு உருவானால், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம்,” என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டசபை கூட்டத்தொடர், இன்று துவங்கவுள்ள நிலையில், தி.மு.க., – எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில், முதன்மை செயலர் துரைமுருகன் உட்பட, எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். அப்போது, சட்டசபையில், தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடுகள் குறித்தும், அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது, கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கறுப்பு சட்டை அணிந்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்து வெளியே வந்த ஸ்டாலின் நிருபர்களிடம், ”சட்டசபையில், வாய்ப்பு உருவானால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம். எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம், குட்கா போன்ற வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது,” என்றார்.

Previous Post

மதுபோதையில் தகராறு : ஒருவர் கொலை!

Next Post

ட்விட்டரில் மோதிக்கொண்ட இரு மாநில முதல்வர்கள்

Next Post

ட்விட்டரில் மோதிக்கொண்ட இரு மாநில முதல்வர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

தமிழக முதல்வரிடம் யாழ் கடற்றொழிலாளர் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!

July 22, 2026
ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

July 22, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026

Recent News

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

தமிழக முதல்வரிடம் யாழ் கடற்றொழிலாளர் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!

July 22, 2026
ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

July 22, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures