Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தாயக – கொழும்பு அரசியல் எதிர்வலைகளுக்குள் சிக்குண்டுள்ள சிறீதரன்

January 27, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தாயக – கொழும்பு அரசியல் எதிர்வலைகளுக்குள் சிக்குண்டுள்ள சிறீதரன்

நாடாளுமன்ற உறுப்பினர் சி சிறீதரன் விவகாரம் கொழும்பு மைய அரசியலை நடத்துவதா அல்லது தாயக மைய்ய அரசியலை நடத்துவதா என்ற பிரச்சனையே என அரசியல் ஆய்வாளரும் சட்டதரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி. அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “2010 ம் ஆண்டு சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை இரா. சம்மந்தனே எடுத்திருந்தார். அது சம்மந்தனின் முழுப்பொறுப்பு. அதனை எடுக்க வேண்டிய சூழலை உருவாக்கியிருந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு

அன்று முதலாவது எதிரி மகிந்த ராஜபாக்ச, அவரை பலவீனப்படுத்தவே தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த முடிவை எடுத்திருந்தது.

தாயக - கொழும்பு அரசியல் எதிர்வலைகளுக்குள் சிக்குண்டுள்ள சிறீதரன் | Sritharan Caught Political Conflicts Colombo Tamil

அன்று கஜேந்திரகுமாறும் சுரேஷ் பிரேமசந்திரனும் தமிழ் தேசிய கூட்மைப்பில் இருந்தமையால் அந்த முடிவுக்கு இணங்கி போகவேண்டியிருந்திருக்கலாம். அப்போது அந்த முடிவெடுத்தது தவறு என்பது எனது அபிப்பிராயம்.

அந்த நேரம் பொது வேட்பாளர் என்ற சிந்தனை அதிகரிக்கவில்லை. உண்மையில் அந்த இரண்டு பேரையும் ஆதரிக்க முடியாது. இரண்டு பேரையும் விடுத்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தியிருக்கலாம்.

அந்த இடத்தில் அவர்கள் விட்டது தவறு. ஆனால் அன்றைக்கு முதலாவது எதிரி மகிந்த ராஜபக்ச, அன்று சரத் பொன்சேகாவை தமிழ் தேசிய கூடாமைப்பு ஆதரிக்காமல் விட்டிருந்தாலும் மக்கள் ஆதரிக்கின்ற சூழல்தான் அப்போது இருந்தது.

ஆனால் அன்று இருந்த சூழலுக்கும் இன்று இருக்கின்ற சூழலுக்கும் வேறுபாடு உண்டு. நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் முன்னாள் இராணுவ தளபதியாக இருந்த ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு ஆதரவளித்ததாக ஒரு குற்றசாட்டு முன்வைக்கப்படுகிறது.

தமிழ் மக்களின் அபிலாசை

அது தொடர்பில் அவர் பொது வெளியில் எதனையும் கூறவில்லை. அவர் ஆதரவு கொடுத்திருந்தால் உண்மையில் அது தவறதுதான்.

அதற்காக அவரை அரசியல் அமைப்பு பேரவையிலிருந்து விலக சொல்லி கேட்பது பொருத்தமில்லை. ஆனால் அதனை கேட்பவர் யார் எனில் அவர் சுமந்திரன்.

சுமந்திரன் ஏற்கனவே தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக செயற்பட்ட ஒருவர். திருகோணமலை புத்தர் விகாரைக்கு ஆதரவாக இருந்த சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக இருந்தவர்.

ஆகவே சுமந்திரனுக்கு அதனை சொல்லுகின்ற நியாயப்பாடு இருக்கின்றது என்பதை கூறிவிட முடியாது.

இந்த விடயத்தில் சிறீதரன் இராணுவ தளபதிக்கு வாக்களித்திருந்தால் அது தொடர்பான காரணத்தை மக்களுக்கு சொல்லவேண்டும்.

உண்மையாக இருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டும், இனிமேல் அவ்வாறு நடக்காமல் இருப்பதற்குரிய உத்தரவாதத்தையும் வழங்கவேண்டும். அதுதான் பொருத்தமாக இருக்கும்.

அதற்காக அவரை அரசியல் அமைப்பு பேரவையில் இருந்து வெளியேறவேண்டும் என கூறவேண்டிய தேவை இல்லை என்றுதான் நினைக்கின்றேன்.

சிறீதரனுக்கு எதிரான மிக மோசமான கருத்துக்களை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர முன்வைத்திருந்தார்.

இதற்கெல்லாம் பின்புலமாக நின்று செய்யப்பட்டவர் சுமந்திரன்தான்.

சுமந்திரன் கொழும்பு மைய அரசியலை நகர்துகின்ற ஒருவர். கொழும்பு மைய அரசியலை நகர்த்த வேண்டும் என்றால் சிறீதரனை இந்த அரசியலில் இருந்து அகற்ற வேண்டும். அவரை அகற்றாமல் கொழும்பு மைய்ய அரசியலை அவரால் செய்ய முடியாது” என்றார்.

Previous Post

நடிகர் மோகன்லால் நடிக்கும் ‘L367 ‘

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures