Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தலைவர் உயிரோடு இருக்கும் போதே கொல்லப்பட்ட பொட்டம்மான்! இராணுவத்தினரோடு 45 நிமிடங்கள் போராடிய பிரபாகரன்!

September 8, 2016
in News, Politics
0

தலைவர் உயிரோடு இருக்கும் போதே கொல்லப்பட்ட பொட்டம்மான்! இராணுவத்தினரோடு 45 நிமிடங்கள் போராடிய பிரபாகரன்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக் கட்டப்போரில் இராணுவத்தினருடன் 45 நிமிடங்களாக போராடினார் என மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய பேட்டியின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவ் ஊடகத்திற்கு அவர் வழங்கிய நேர்காணலின் ஒரு பகுதி,

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 2009 மே 19ஆம் திகதி காலை 9.30 மணியளவில் தொடங்கி 45 நிமிடங்கள் இராணுவத்தினரோடு கடுமையான போரில் ஈடுபட்டார்.

எனினும் தொடர்ந்து நீடித்த போரின் போது எமது படைப்பிரிவான 5வது விஜயபாகு படைப்பிரிவினால் கொல்லப்பட்டார்.

இறுதிக் கட்டப்போரின் போது பிரபாகரன் மட்டுமல்லாது, கடற்புலிகளின் தளபதி சூசை, புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான், தளபதி பானு, உள்ளிட்டவர்களும் கொல்லப்பட்டிருந்தனர்.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கும் போதே புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் கொல்லப்பட்டார்.

ஆனால் பொட்டம்மான் கொல்லப்பட்டு அடுத்த நாளே பிரபாகரனும் களத்தில் கொல்லப்பட்டார். இதை நான் உறுதியாக கூறுகின்றேன்.

எவ்வாறெனினும் அவர் தப்பியோடி வெளிநாடு ஒன்றில் வாழ்ந்து வருவாரானால் நிச்சயமாக இப்பொழுது வெளியே வந்திருப்பார் என்றார் கமால் குணரட்ன.

இதேவேளை பிரபாகரனின் மகன்கள் குறித்து, கருத்து வெளியிட்ட கமால் குணரட்ன, பிரபாகரனின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனி, கெமுனுவோச் படைப்பிரிவுடனான சண்டையில், 2009 மே 18ஆம் நாள் கொல்லப்பட்டார் என்பதை உறுதிப்படுத்துகின்றேன். அதை நான் நன்கு அறிவேன்.

எனினும், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் என்னவானார் என்பது குறித்து எனக்குத் தெரியாது என்றும் பதில் அளித்துள்ளார்.

ஆனால் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் இராணுவத்தினரிடத்தில் சரணடைந்த பின்னரே பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டார் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

கார் வெடிகுண்டு சதி முறியடிப்பு: பிரான்சில் மீண்டும் பரபரப்பு

Next Post

மலேசிய பாம் தோட்டங்களில் வேலை செய்யும் விடுதலைப் புலிகளின் தலைவர்கள்!

Next Post

மலேசிய பாம் தோட்டங்களில் வேலை செய்யும் விடுதலைப் புலிகளின் தலைவர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கிய ஆளுநரின் வர்த்தமானி மீதான இடைக்காலத் தடை நீடிப்பு

July 16, 2026
சரத்குமார் நடிக்கப் போகும் 171ஆவது படத்தின் அறிவிப்பு

சரத்குமார் நடிக்கப் போகும் 171ஆவது படத்தின் அறிவிப்பு

July 16, 2026
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ஆதித்யா பாஸ்கர் நடிக்கும் ‘ஃபீல் மை லவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ஆதித்யா பாஸ்கர் நடிக்கும் ‘ஃபீல் மை லவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

July 15, 2026
MCA T10 கிண்ணத்தை கைப்பற்றிய சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ்

MCA T10 கிண்ணத்தை கைப்பற்றிய சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ்

July 15, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures